ஜாதகப்படி யாருக்கெல்லாம் சொகுசு வாகன யோகம் உள்ளது தெரியுமா ?

Vagana Yogam
- Advertisement -

ஆதிகாலத்தில் நடந்தே பயணம் செய்த மனிதன், பின்னர் மாடு, குதிரை, கழுதை போன்ற கால்நடைகளில் ஏறிப் பயணம் செய்தான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குதிரை, மாடுகள் பூட்டிய வண்டிகளின் மீது பயணிக்கத் தொடங்கினான். அந்த வேகமும் போதாமல் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களிலும், வானத்தில் காற்றின் வேகத்துக்கு ஈடாக விமானத்திலும் பயணம் செய்கிறான். ஆக, வாகனங்களைப் பயன்படுத்தாத மனிதர்களை இன்று காண்பது அரிதாகிவிட்டது.

astrology

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோகங்களில் வாகன யோகமும் ஒன்று. சிலர் ஆட்டோ வாங்கி நேர்மையாக உழைத்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே பல ஆட்டோக்கள், கார்கள் என வசதியாக வாழ்வார்கள். சிலரோ பல கார்களை வைத்து வியாபாரம் தொடங்கி, காலப்போக்கில் முடங்கிப்போய் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுவார்கள். மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் காரோடு உலா வருவார். பெரும் பணக்காரர் பேருந்தில் சென்று வருவார். இப்படிப் பலரைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் காரணம் வாகன யோகம்தான். வாகன வசதி ஒருவருக்கு ஏற்பட உழைப்பு தேவையா அல்லது யோகம் தேவையா என்று, ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசியிடம் கேட்டோம்.

- Advertisement -

“வாகன யோகம் எல்லோருக்கும் அமைவதில்லை. குரு பகவான் அருள் இருந்தால் மட்டுமே வாகன யோகம் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவானின் இடத்தைக்கொண்டே அவர்களின் வாகன யோகத்தை அறிந்துகொள்ளலாம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் குரு பகவான் இருந்தால், அவர்களுக்கு வாகன யோகம் அமையும். இந்த இடங்களில் குரு இருந்தால் கஜகேசரி யோகம் எனப்படும். இந்த யோகம் இருப்பவர்களுக்கு வாகன யோகம் அமோகமாக அமையும். 4, 7, 10 இடங்களை குரு பகவான் பார்த்தாலும், அவர்களுக்கு வாகன யோகம் அமையும். நான்காம் இடத்து அதிபதியும், பத்தாமிடத்து அதிபதியும் லக்னத்தில் உச்சம் பெற்றால் விசேஷமானது. இந்த இடங்களில் குரு பகவான் ஸ்திரமாக இருந்தால், சொந்த வாகனமாக இல்லாவிட்டாலும் அவர்கள் எப்போதும் வசதியான வாகனங்களிலேயே பயணம் செய்துகொண்டிருப்பார்கள்.

இந்த யோகம் இல்லாதவர்கள் எத்தனை வசதிகொண்டிருந்தாலும், அவர்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்க மாட்டார்கள். காசு கொடுத்து மற்றவர்கள் வாகனத்தில் வேண்டுமானால் அவர்கள் பயணம் செய்வார்கள். வாகன வசதிக்கு உரிய 4-ம் இடத்து அதிபதி, 12-ம் இடத்து அதிபதியுடன் சேர்ந்திருந்தால், வாகன நஷ்டமே உண்டாகும். 4-ம் இடத்து அதிபதி 8-ம் இடத்து அதிபதியோடு சேர்ந்தால் சிறு விபத்துகளும், 4-ம் இடத்து அதிபதி 6-ம் இடத்து அதிபதியோடு சேர்ந்திருந்தால் அடிக்கடி வாகனம் பழுதடையும்.
வாகன யோகம் இல்லாதவர்களுக்கு, அந்த யோகம் கிடைக்க எந்தப் பரிகாரமோ கோயிலோ இல்லை. எல்லாமே கடவுள் செயல்கள்தான். நம்முடைய வாழ்க்கையே நம்முடைய முன்னோர்கள் கொடுத்ததுதான். அவர்களை வழிபடும் பித்ரு வழிபாடு, குலதெய்வ வழிபாடுகளைக் குறைவில்லாமல் செய்து வாருங்கள். அதுவே உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் செய்யும்.

- Advertisement -

astrology

புதிய வாகனம் வாங்குபவர்கள் முனீஸ்வரர், மாடன் போன்ற எல்லைத் தெய்வங்களுக்கு எலுமிச்சை, பூசணி, தேங்காய் போன்றவற்றை உடைத்து பலியாகக் கொடுத்து வணங்குவார்கள். இது மிகவும் நல்லது. எல்லைத் தெய்வங்கள் பெரும்பாலும் வாழ்ந்து மறைந்த பித்ருக்களின் அம்சம்தான். அவர்களின் அருளால் எந்தவிதக் கெடுதலும் நடக்காமல், மேலும் மேலும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாகன வசதி அமையாதவர்கள் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி தேடுவதைவிட தெய்வ நம்பிக்கையுடன் பித்ரு வழிபாடும் செய்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்’’ என்றார் கிருஷ்ணதுளசி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் பார்க்கலாமே:
தினசரி பஞ்சாங்கத்தை தெளிவாக அறிய உதவும் தமிழ் காலண்டர்

English overview:
The person getting bike or car is based on his astrology. Here we discussed few things about sophisticated vehicle yogam. Based on this once on decide about his lifestyle.

- Advertisement -