நாளை வரக்கூடிய சனிக்கிழமை அன்று இதை மட்டும் செய்யுங்கள் போதும். சனி பகவானால் வாழ்க்கையில் உங்களுக்கு வரக்கூடிய தடைகள் அத்தனையும் நீங்கும்.

sanibagavaan

சனிபகவானை போல கொடுப்பவரும் கிடையாது, கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு சனி பகவானால் தோஷங்கள், பிரச்சனைகள், ஏழரை சனி பாதிப்புகள், அஷ்டமத்து சனி பாதிப்புகள் என்று எந்த வகையில் முன்னேற்றம் தடை பட்டுக் கொண்டிருந்தாலும் சரி, நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகள் படிப்படியாக குறைவதை உங்களால் கண்கூடாக காணமுடியும். அப்படி ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

sanibagavan1

உங்களுக்கு சனி பகவானால் எந்த ஒரு தோஷமும் இல்லை எனும் பட்சத்திலும், சனி பகவானை நினைத்து நாளை வரக்கூடிய வைகாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை உங்களால் பெற முடியும்.

நாளைய தினம் முதலில் நீங்கள் எழுந்து குளிக்கும்போது எள் ஸ்னானம் செய்யவேண்டும். இன்று இரவு தூங்க செல்லும் போது, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் எள் போட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஊற வைத்திருக்கும் எள் தண்ணீரிலிருந்து, வெறும் தண்ணீரை மட்டும் குளிக்கின்ற தண்ணீரில் கலந்து, தலை ஸ்நானம் செய்ய வேண்டும்.

இந்த ஸ்நானத்தை சுடு தண்ணீரிலும் செய்யலாம். பச்சை தண்ணீரிலும் செய்யலாம். எந்த தவறும் கிடையாது. அது உங்களுடைய இஷ்டம். ஊறவைத்த எள்ளினை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையில் காலை 9 மணிக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒரு சிறிய தாம்புல தட்டில் ஒரு மண் அகல் வைத்து, நல்லெண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதன் அருகில் கொஞ்சமாக அரை ஸ்பூன் அளவு எள் வைத்து சனி பகவானை மனதார வேண்டி, உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த தீபம் மேற்கு திசையை நோக்கி எறிய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இப்படிப்பட்ட பரிகாரத்திற்கு காமாட்சியம்மன் விளக்கில் தீபம் ஏற்றி வைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாளைய தினமே மதியம் சுத்தமாக சமைக்க வேண்டும். சமைத்த வெள்ளை சாதத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவு சாதத்தை எச்சில் செய்வதற்கு முன்பாகவே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த சாதத்துடன், பூஜை அறையில் தீபம் அருகில் வைத்த அந்த எள்ளை கலந்து காகத்திற்கு வைத்துவிடுங்கள். நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்யும் போது சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக நம்மால் பெற முடியும். உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் எவ்வளவு வக்கிரமாக இருந்தாலும், அவர் சாந்தி அடைந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்.

crow

இத்தனை வாரங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நாளையதினம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக அடுத்தடுத்து நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். நிறைய பேருக்கு எள் தீபம் வீட்டில் ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கும். எள் முடிச்சு போட்டு, அந்த எள்ளை நெருப்பில் பற்ற வைத்து தான் தீபம் வீட்டில் ஏற்றக்கூடாது. தீபத்திற்கு அருகில் எள் வைத்து, சனி பகவானை நினைத்து வழிபாடு செய்யலாம் என்ற கருத்தினை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.