நாளை வைகாசி தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன் பெறுங்கள்

bairava
- Advertisement -

பழங்காலங்களில் எந்த ஒரு கோவில் சார்ந்த விழாக்களின் தொடக்கம் மற்றும் முடிவில் காவல் தெய்வங்களை பூஜை செய்து வழிபடும் முறை அதிகம் கடைப்பிடிக்கப்பட்டது. நமது அகம், புறம் என அனைத்தையும் தீயவற்றில் இருந்து காக்கும் கடவுள்களாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கின்றனர். அதில் மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Bairavar

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருகிற வைகாசி தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.

- Advertisement -

வைகாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி என அழைக்கப்படுகிறது. அன்று மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

kaala bairavar

மேற்கண்ட முறையில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கடவுளிடம் பேச இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi theipirai ashtami in Tamil. It is also called as Bairavar valipadu in Tamil or Vaikasi matham in Tamil or Kalabhairava in Tamil or Theipirai ashtami valipadu in Tamil.

- Advertisement -