நாளை வைகாசி தேய்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் அற்புதமான பலன்கள் உண்டு

sivan
- Advertisement -

“சர்வம் சிவமயம்” என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்களின் சித்தாந்தமாகும். வாழ்வில் துன்பங்கள், துயரங்கள், இன்ன பிற கஷ்டங்களை அனுபவிக்காத மனிதர்கள் உலகில் எவருமே இருக்க முடியாது. இக்காலங்களில் உண்மையான இறை நம்பிக்கை நம்மை கடினமான சூழ்நிலைகளிலிருந்து மீட்டெடுக்கும். வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nandi

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கும் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

Sivan

கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்குவது சிறப்பானதாகும். இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இதை செய்தால் வேலை சீக்கிரம் கிடைக்கும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi theipirai pradosham in Tamil. It is also called as Vaikasi matham in Tamil or Pradosham valipadu in Tamil or Vaikasi pradhosham in Tamil or Vaikasi matha pradhoshangal in Tamil.

- Advertisement -