நாளை வைகாசி வளர்பிறை ஏகாதசி – இதை செய்தால் மிகுந்த பலன்களை பெறலாம்

vaikasi-ekadasi

சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே வைகாசி மாதம் எனப்படுகிறது. வைகாசி மாதம் என்பது பொதுவாக முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மாதம் என்று பலர் நினைத்தாலும் திருமாலின் வழிபாட்டிற்குரிய மாதமாகவும் இது இருக்கிறது. வைகாசி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி தினம் வருகிறது. இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி ” மோகினி ஏகாதசி” எனப்படுகிறது. திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான். வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது.

இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

vishnu

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும். இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். உங்கள் எதிர்கால வாழ்விற்காக நீங்கள் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் அனைத்தும் பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.

இதையும் படிக்கலாமே:
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi valarpirai ekadasi in Tamil. It is also called as Ekadasi vratham in Tamil or Vaikasi matham in Tamil or Mohini ekadashi in Tamil or Mohini ekadasi viratham in Tamil.