அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு செல்வம், பூமி லாபம் உண்டாகும் பரிகாரங்கள் இதோ

sevvai

நமது ஜோதிட வல்லுனர்கள் வானில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களின் தாக்கத்தில் பிறக்கும் மனிதர்கள் வெவ்வேறு குணங்களை கொண்டிருப்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டரிந்துள்ளனர். இவற்றில் செவ்வாய் பகவானுக்குரிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தைரிய குணமிக்கவர்களாக இருப்பதை நாம் காண முடியும். அந்த செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு நட்சத்திரமாக அவிட்டம் நட்சத்திரம் வருகிறது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல நன்மைகளை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

chevvai

27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்து மூன்றாவதாக வரும் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் ஆகும். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக அனந்த சயன பெருமாள் எனப்படும் ரங்கநாதர் இருக்கிறார். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களாக அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் பூமி லாபம் மற்றும் செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலுக்கோ அல்லது திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கோ சென்று பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் மங்களங்கள் பெருகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானையும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானையும் வழிபட்டு வர நன்மையான பலன்கள் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. எனவே வன்னி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று, வன்னி மரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் ஏற்றமிகு பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும்.

Lord Murugan

செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை சிவன் கோயில்களுக்கு கடலை பருப்பு களை தானம் செய்வது நல்லது. உங்களால் முடிந்த போது வசதி குறைந்த ஒரு நபருக்கு கருப்பு நிறத்திலான புதிய காலணிகளை தானம் செய்யவும். எரும்பு புற்றுகளில் உள்ள எறும்புகளுக்கு சிறிது வெல்லத்தை உணவாக அளிப்பது உங்கள் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
மாத்ரு சாபம் நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Avittam nakshatra pariharam in Tamil. It is also called as Nakshatra pariharangal in Tamil or Avittam natchathiram athipathi in Tamil or Avittam natchathiram in Tamil or Avittam natchathira kovil in Tamil.