நாளை வைகாசி விசாகம் – இதை எல்லாம் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு

murugan

நமது நாட்டின் ஆன்மீகம் மற்றும் இறைவழிபாடு முறைகளில் ஜோதிட கலையும் இணைந்து செயல்படுகிறது. சில குறிப்பிட்ட நட்சத்திர தினங்களில் பூமியில் பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் அதிகம் குவிவதால் அந்த தினம் வழிபாட்டிற்குரிய தினமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர். “மார்கழி திருவாதிரை, மாசி மகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை” வரிசையில் வைகாசி விசாகம் தினம் தெய்வ வழிபாட்டிற்கு உரிய ஒரு நாளாக கடைபிடிக்கபடுகிறது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமான் வழிபாட்டு தினமாக இந்நாள் இருக்கிறது. இந்நாளில் நாம் முருகப் பெருமானின் அருளைப் பெற செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

புராணங்களின் படி விசாகன் எனப்படும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது விசாக மாசம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் வைகாசி மாதம் என மாறியதாக ஒரு தகவல் கூறப்படுகிறது .மேலும் 27 நட்சத்திரங்களில் 16 வது நட்சத்திரமாக இந்த விசாகம் நட்சத்திரம் வருகிறது. விசாக நட்சத்திரத்திற்குரிய அதிபதி குரு பகவான் ஆவார். எனவே வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று முருகனை வழிபடுபவர்கள் முருகப் பெருமான் மற்றும் குருபகவான் ஆகிய இருவரின் அருளையும் சேர்த்து பெறுபவர்கள் ஆகின்றனர்.

வைகாசி விசாகத்தன்று முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. அற்புதமான வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய காரியம் சீக்கிரம் நிறைவேறுவதோடு, இன்ன பிற நல்ல பலன்களும் கிடைக்கும். முருகனை இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடும் குழந்தையில்லா தம்பதிகளுக்கு நன்மக்கட்பேறு உண்டாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும்.

murugan

வைகாசி விசாக தினத்தில் தானங்கள் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த புண்ணிய தினத்தில் தினத்தில் முருகனை வழிபட்டு மோர், பானகம், இளநீர், தயிர்சாதம் போன்றவற்றை பக்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு தானம் செய்தால் ஒருவரின் குலம் எல்லாச் செல்வங்களையும் பெற்று தழைத்தோங்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

kantha sasti kavasam lyrics

இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தீராத பகை விலகும்.உறவினர்கள், நண்பர்களிடையே ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். இல்லத்தில் சுப காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். உங்கள் வேலைகளில் வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் ஏற்படும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் புத்திர தோஷம் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi visakam in Tamil. It is also called as Vaikasi matham in Tamil or Visakam natchathiram in Tamil or Vaikasi visakam sirappu in Tamil or Vaikasi visakam enraal enna in Tamil.