நாளை (25/5/2021) ‘வைகாசி விசாகம்’ இப்படி எளிமையாக விரதம் இருந்தால்! தீராத நோய் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட, பகை ஒழிய, எத்தகைய கடன்களும் அகலும்.

murugan-vilakku

27 நட்சத்திரங்களில் ஞானத்திற்கு உரிய நட்சத்திரமாக இருப்பது ‘விசாக நட்சத்திரம்’! விசாக நட்சத்திரம் அன்று தான் முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அவதாரம் புரிந்தார் என்கிறது புராணம். தீயதை அழித்து, நல்லதை நிலைநாட்ட அவதாரம் புரிந்த முருகனை வைகாசி விசாக நட்சத்திரத்தன்று வழிபடுபவர்களுக்கு எத்தகைய கெடுதல்களும் விலகிப் போகும் என்பது பக்தர்களுடைய தீராத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இம்முறை வைகாசி விசாக விரதம் வீட்டிலேயே எளிமையாக எப்படி இருப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

murugan-1

பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று முருகன் கோவில்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வரும். பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்று ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு பக்தி பரவசத்தோடு முருகனை வழிபடுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் முருகனை வீட்டிலேயே எப்படி எளிமையாக விரதமிருந்து வைகாசி விசாக விரத பலன்களை பெற்றுக் கொள்வது?

பன்முக பெயர்களைக் கொண்ட ஆறுமுகனுக்கு வைகாசி விசாகம் அன்று உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்தால் கேட்டது கிடைக்கும் என்பது நியதி. இந்த விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் தங்களால் முடிந்த அளவிற்கு நீர் தானம், நீர்மோர் தானம், தயிர் சாதம் ஆகியவற்றை தானம் கொடுப்பதும், குடை, செருப்பு, போர்வை, அன்னம், வஸ்திரம் போன்றவற்றை தானம் கொடுப்பதும் பெறற்கரிய பேற்றைப் பெற்றுத் தரும். நீங்கள் இன்றைய நாளில் செய்யும் புண்ணிய காரியங்கள் இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.

sevvai-murugan-peruman

அதிகாலையில் எழுந்து நீராடி முருகன் படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, நைவேத்தியம் படைக்க கந்தரப்பம் தயார் செய்து கொள்ளலாம். விநாயகருக்கு எப்படி கொழுக்கட்டையோ! அதே போல முருகனுக்கு கந்தரப்பம் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. படத்தின் முன்பு இரண்டு 5 முக குத்து விளக்குகளை வைத்து கொள்ளுங்கள். குத்துவிளக்கு மஞ்சள், குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சூடி இருக்க வேண்டும். ஐந்து வகை மலர்களால் முருகனை அலங்காரம் செய்வது சிறப்பானது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவற்றையெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்பதால் உங்களிடம் இருக்கும் பூக்களை சாற்றுங்கள் பரவாயில்லை.

- Advertisement -

முருகன் சிலை வைத்திருப்பவர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு பொருள் கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. முருகன் வேல் வைத்திருப்பவர்களும் இந்த அபிஷேகங்களை செய்யலாம். பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்யும் பொழுது நினைத்த காரியம் வெற்றியாகும். சந்தனத்தால் அபிஷேகம் செய்யும் பொழுது சரும பிரச்சனைகள் நீங்கும். பச்சரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்யும் போது எத்தகைய தீராத கடன்களும் தீருமாம். பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வம் மென்மேலும் பெருகும். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் எல்லாமே நன்மையாக நடக்கும்.

நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். திருப்புகழ் படிப்பது, கந்த சஷ்டி கவசம் வாசிப்பது, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது அல்லது ‘ஓம் சரவணபவ’ என்கிற சரவணன் உடைய மந்திரத்தை ஜபிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். தம்பதியராக வைகாசி விசாக விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.

agal-vilakku

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள் ஆகிய கடன் தொல்லை, பகைவர்கள் தொல்லை, ஆரோக்கிய பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் நிச்சயமாக தீரும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளை தவறவிடாமல் உங்களால் முழுமையாக விரதமிருந்து கடைப்பிடிக்க முடிந்தால் விரதம் இருக்கலாம் அல்லது ஒருவேளை உணவருந்தி, இருவேளை பாலும், பழமும் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகனின் அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.