வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது

vaikunda ekathesi
- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக் கூடிய அத்தனை நாட்களும் விசேஷமானவை தான். அதில் பெருமாளுக்கு உகந்த இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில் இரவு முழுவதும் கண் விழித்து பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அத்தகைய வைகுண்ட ஏகாதசியில் நம் வீட்டில் செய்யக் கூடிய ஒரு செயல் நம்முடைய செல்வ வளத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

23. 12. 2023 அன்று காலை நான்கு மணி அளவில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடக்கும். இந்த நேரத்தில் அனைத்து பெருமாள் கோவிலிலும் இந்த வைபவத்தை விமர்சையாக பூஜை வழிபாடு செய்வார்கள். இந்த சொர்க்க வாசல் திறப்பு பூஜையில் கலந்து கொள்வது நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்னல்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

- Advertisement -

அந்த நேரத்தில் நாம் வீட்டில் ஒரு சிறிய பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையானது பெருமாளின் பரிபூரண அனுகிரகத்தை நமக்குப் பெற்றுத் தருவதாக இருக்கும். ஆகையால் தவறாமல் அனைவரும் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 23. 12 . 2023 சனிக்கிழமை அன்று காலை 3 மணிக்கு எழுந்து குளித்து முடித்து விட வேண்டும்.

அதன் பிறகு வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் போட்டு விட வேண்டும். இவையெல்லாம் விடியற்காலை 4 மணிக்குள்ளாக நாம் செய்து விட வேண்டும். 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் நிலை வாசலில் இரண்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு தீபமும் கிழக்கு நோக்கி எரியும் படி வைக்க வேண்டும்.

- Advertisement -

இதை ஏற்றிய பிறகு நேராக பூஜை அறையில் வந்து மூன்று நெய் விளக்கு கிழக்கு முகமாக வைத்து ஏற்றி விடுங்கள். இந்த தீபம் நெய் விளக்காக இருப்பது சிறந்தது. இத்தனை நெய் தீபம் ஏற்ற முடியாதவர்கள் ஒரே ஒரு நெய் தீபத்ங ஏற்றி விட்டு மற்ற நான்கு விளக்குகளை நல்லெண்ணெய் தீபமாக ஏற்றலாம். அதன் பிறகு வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இது மிகவும் அவசியம்.

அந்த நேரத்தில் வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜையறையில் கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை செய்து கொள்ளுங்கள். சொர்க்க வாசல் திறக்கும் இந்த நேரத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்யும் இந்த பூஜையானது பெருமாளை நேரடியாக உங்கள் வீட்டிற்கு வர வைக்க கூடியதாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பரிகாரம்

பலருக்கும் இந்த பூஜை செய்யும் போது வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்ன செய்வது என்ற சந்தேகம் எழலாம். பூஜை செய்பவர்கள் விரதம் இருப்பவர்கள் எழுந்து இதை செய்தால் போதும் மற்றவர்கள் இந்த நேரத்தில் உறங்கினாலும் தவறும் கிடையாது. ஆகையால் மனதார நம்பிக்கையுடன் இறைவனை வழிபட்டு அவருடைய பரிபூரண அருள் ஆசியை பெறுங்கள்.

- Advertisement -