நாளை 2022 வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் தவறியும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

vaikunta-ekadasi-2022
- Advertisement -

பிலவ வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஆகிய நாளை பெரிய ஏகாதசி என்று கூறப்படும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விரதம் வெகு விமர்சியாக அனுஷ்டிக்கப்படும். எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா அன்றைய நாளில் நடைபெற இருப்பதால் திரளான பக்தர்கள் வைகுண்ட வாசனை தரிசிக்க விரதமிருந்து வழிபடுவார்கள். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தவறிக்கூட செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கான வரலாறுகள் பல்வேறு விதமாக புராணங்கள் குறிப்பிட்டாலும் முக்கியமாக பிரம்மனுக்கு பாடம் புகட்ட யோக நித்திரையில் இருக்கும் மகாவிஷ்ணுவின் காதில் இருந்து வந்த ராட்சசர்கள் பிரம்மனை துரத்த பிரம்மனும் செய்வதறியாது கடைசியில் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்து நித்திரையை கலைத்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். நித்திரையில் இருந்து எழுந்த மகாவிஷ்ணு மது, கைடபர் என்கிற அந்த ராட்சசர்களிடம் பிரம்மனை விட்டுவிடும் படியும், தங்களுக்கு வேண்டிய வரம் தருவதாகவும் கூறினார்.

- Advertisement -

ஆனால் ராட்சஸர்களோ தாங்கள் என்ன எங்களுக்கு வரம் தருவது? நாங்கள் வேண்டுமானால் உங்களுக்கு வரம் தருகிறோம் என்ன வரம் வேண்டும்? கேளுங்கள் என்று கேட்டனர். மகாவிஷ்ணுவும் உங்களை வதம் செய்ய வேண்டும் என்று சாதுரியமாக வரத்தைக் கேட்டு விட்டார். நாமே வசமாக மாட்டிக் கொண்டோமே சரி, என்று நினைத்த அந்த ராட்சசர்கள் ஒரு விண்ணப்பத்தை வேண்டினர். ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் புரிந்த பிறகு நீங்கள் உங்கள் கையால் எங்களை வதம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் ஆணைக்கிணங்க மகாவிஷ்ணுவும் யுத்தம் புரிந்து அவர்களை வீழ்த்தி விட்டார்.

மகாவிஷ்ணுவின் மகிமைகளை உணர்ந்த அந்த அசுரர்கள் தங்களை வைகுண்டத்தில் நித்திய வாசம் செய்ய வரம் கேட்டனர். அவர்களின் ஆசைப்படியே வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் நித்திய வாசம் புரிய அவர்களுக்கென இடத்தைக் கொடுத்தார். அவர்கள் பெற்ற இன்பம் இவ்வையக மக்களும் பெறுவதற்காக அந்த ராட்சசர்கள் இந்த ஏகாதசி நாளன்று சொர்க்கவாசல் வழியாக உங்களுடன் வந்து உங்களை தரிசிப்பவர்களுக்கு முக்தி கொடுக்க வேண்டும். வைகுண்டத்தில் ஒரு இடம் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இந்நாளை உற்சவமாக கொண்டாட வேண்டும் என்று சுயநலமில்லாத இந்த வேண்டுதலுக்கு இணங்கி இன்றும் சொர்க்க வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு முக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு.

- Advertisement -

இதற்காக அன்று ஏகதாசி நாள் முழுவதும் விரதம் இருந்து அவரை வழிபடுபவர்களுக்கு எல்லா வளங்களையும் கொடுக்கின்றார். விரதம் இருப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் விஷ்ணு ஸ்தோத்திரங்களையும், மந்திரங்களையும், சஹஸ்ரநாமம் போன்றவற்றையும் படிப்பது நல்ல பலன் தரும். மேலும் இரவு தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிவி பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது, முழு ஆன்மீக சிரத்தையுடன் செய்யும் பொழுது தான் இதற்கான முழு பலனும் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல அன்றைய நாள் முன்னோர்களின் நினைவு நாளாக இருப்பின் அவர்களுக்குரிய சிரார்த்தத்தை செய்யக்கூடாது. மறுநாள் தான் சிரார்த்தம் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஒரு வேளையாவது உபவாசம் இருந்து விரதம் இருக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் கண்டிப்பாக அசைவ உணவை எடுத்துக் கொள்ளாமல், சைவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரதம் இல்லாவிட்டாலும் விரதம் இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்வது கூடாது. அதே போல விரதத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை செய்து துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

- Advertisement -