வைகுண்ட ஏகாதசி விரத பலன்களை தரும் வழிபாட்டு முறை

Perumal
- Advertisement -

வருடந்தோறும் வரும் வரும் மார்கழி மாதத்தில் வருகிற ஒரு சிறப்பான நன்னாள் தான் “வைகுண்ட ஏகாதசி”. பாற்கடலில் இருக்கும் பரந்தாமனின் அருளை பெறுவதற்கு இந்நன்னாளில் ஏகாதசி விரதம் இருந்து பக்தர்கள் அனைவரும் மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்கி நல்லருளை பெறுகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களால் சில காரணங்களால் வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாமல் போகிறது.

இப்படி ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாமல் வருந்தும் பக்தர்கள் அந்த விரதத்தின் பலனை பெற மகாவிஷ்ணுவின் அம்சமானவரும், திரேதா யுகத்தில் ஸ்ரீராமராக தோன்றியவரும், துவாபர யுகத்தில் உலகிற்கு பகவத் கீதை எனும் உயரிய நீதி போதனை தத்துவங்களை அளித்தவருமான “ஸ்ரீ கிருஷ்ண” பரமாத்மாவை போற்றும்

- Advertisement -

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

God Perumal

எனும் இம்மந்திரத்தை 108 முறை தொடர்ந்து பாராயணம் செய்து பலன் பெறலாம். 108 எண்ணிக்கை என்பது ஒரு பொதுவான கணக்கு தான் தவிர, இந்த ஏகாதசி தினத்தில் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு மேற்கூறிய மந்திரத்தை துதிக்கலாம். தொடர்ச்சியாக மந்திர ஜெபம் செய்ய முடியாதவர்கள் அன்றைய தினத்தின் காலை, மதியம், மாலை மற்றும் இரவு வேளைகளில் மந்திர ஜெபம் செய்யலாம்.

- Advertisement -

ஏகாதசி விரதம் மேற்கொள்ள இயலாவிட்டாலும் இத்தினத்தில் பெருமாளை தியானித்து மேல கூறப்பட்ட மந்திங்களை ஜெபித்து பெருமாளை வணங்குபவர்களுக்கு பெருமாளின் அருளும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். வீட்டில் இருக்கும் வறுமை நிலை ஒழிந்து வளமை பெருகும். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நற்பலன்களை பெறுவார்கள். அனைவருக்கும் மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலை பெருகும்.

இதையும் படிக்கலாமே:
2019 சங்கடஹர சதுர்த்தி நாட்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikunta ekadasi valipadu in Tamil. It is also called Sri krishna mantra in Tamil or Margazhi ekadasi in Tamil or Ekadasi pooja in Tamil or Ekadasi manthiram in Tamil or Perumal valipadu in Tamil.

- Advertisement -