நாளை(25/12/2020) வைகுண்ட ஏகாதசி அன்று இதை செய்தால் பொன்னும், பணமும் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்!

perumal-salt

நாளை வைகுண்ட ஏகாதசி அனைத்து இந்து மத பக்தர்களாலும் விரதமிருந்து கடைபிடிக்கப்படும் அற்புதமான நாள் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதி அன்று கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இன்றைய நாளில் உயிர் நீத்தவர்கள் எல்லாம் மேலோகத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் சொர்க்கம், நரகம் என்று பிரிக்கப்பட்டு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் உயிர் பிரிந்தவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்படும். பரமபத வாசல் என்பது சொர்க்க வாசலை குறிக்கிறது.

sorgavasal

இன்று ஒரு நாள் மட்டும் சொர்க்க வாசல் மேலோகத்தில் திறந்து இருக்குமாம். அதே போல பூலோகத்திலும் கோவில்களில் திறக்கப்படுகிறது. மிகவும் விசேஷ நாளான மார்கழி ஏகாதசி திதி, இந்த வருடம் வெள்ளிக் கிழமையில் வருகிறது. இதனால் கூடுதல் பலன்கள் நமக்கு கிடைக்கப்பெறும். இன்றைய நாளில் நாம் என்ன செய்தால் வாழ்ந்த பிறகு மோட்சத்தையும், வாழும் பொழுது செல்வாக்கையும் பெற முடியும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

நாளை ஏகாதசி திதி அன்று அதிகாலையிலேயே சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு செல்வது மிகவும் நல்லது. கோவிலில் அமர்ந்து அன்றைய நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் கோடி புண்ணியம் என்பார்கள். முதலில் கருடாழ்வாரை வணங்கிவிட்டு பின்னர் துளசி மாலை சாற்றி, பெருமாளை வணங்கிவிட்டு, மகாலட்சுமி தாயாரையும் வழிபட வேண்டும். அதன் பிறகு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். விரதமிருக்க முடியாதவர்கள் நீராகாரம், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பின்னர் மாலை வேளையில் வீட்டில் தயிர் சாதத்தை நிவேதனமாக வைத்து வழிபட வேண்டும்.

thulasi

வைகுண்ட ஏகாதசி அன்று வீட்டில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, மகாலட்சுமியையும் சேர்த்து வழிபட வேண்டும். இன்றைய நாளில் இந்த பூஜையை செய்யும் பொழுது உங்களால் முடிந்தால் சூரியன் மறைவதற்குள் தங்கத்தை வாங்கி பூஜையில் வைக்கலாம். அப்படி தங்கத்தை வாங்க முடியாதவர்கள் அதற்கு இணையான கல் உப்பை மளிகை கடைக்கு சென்று புதிதாக வாங்கி பூஜையில் வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் கல் உப்பை பயன்படுத்தாதீர்கள்.

- Advertisement -

ஒரு சிறிய வெண்கல அல்லது கண்ணாடி பௌலில் கல் உப்பை நிரப்பி அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அதி சக்தி வாய்ந்த எட்டெழுத்து மந்திரத்தை 108 முறை உச்சரித்து பூஜைகளை செய்ய வேண்டும். தயிர் சாதத்தில் மாதுளை முத்துக்களை வைத்து வழிபாடு செய்யலாம். பெருமாளுக்கு மிகவும் பிடித்த தயிர் சாதம், லக்ஷ்மி தேவியின் அம்சமாக இருக்கும் மாதுளையயுடன் இணையும் பொழுது அது மிகச்சிறந்த நிவேதனமாக பார்க்கப்படுகிறது. இதனை வைத்து வழிபட்டாலே வீட்டில் செல்வ வளம் பெருகும். வருமானம் கஷ்டப்படுபவர்கள் இது போல் செய்தால், வருமானம் பன்மடங்கு பெருகும்.

curd-rice

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமல்லாமல் மறுநாள் வரும் துவாதசி அன்றும் பெருமாளுக்கு வீட்டில் பூஜைகள் செய்து வழிபட வேண்டும். மகாலட்சுமி அஷ்டகம் படிக்கலாம். அது போல் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது புண்ணியத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். உங்களுடைய கிரக நிலைகள் சரியாக இல்லாத பொழுது, கஷ்டம் உங்களை ஆட்டிப் படைக்கும். நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும், முன்னேற்றம் என்பதே சிலருக்கு இருக்காது. இது போன்ற நேரத்தில் ஏகாதசி, துவாதசி விழாவை விரதமிருந்து வழிபட்டு சிறப்பான பலன்களை பெறலாம். உண்மையான பக்திக்கு எப்போதுமே இறைவன் செவி சாய்ப்பார். எனவே அன்றைய நாளை தவறவிடாமல் பெருமாளை வணங்கி நல்ல பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட யாருக்கும் தானம் செய்து விடாதீர்கள்! பெரும் பாவம் வந்து சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.