தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு

amman1
- Advertisement -

நாளைக்கு அப்படி என்ன அற்புதம் வாய்ந்த நாள். எந்த விசேஷ நாளும் இல்லையே என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் பல பேருக்கு தெரியாத ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை அதாவது, நவம்பர் 7-2023-ம் தேதி கிருஷ்ண பக்ஷ தசமி. இதை தேய்பிறை தசமி என்றும் சொல்லலாம். அதிலும் செவ்வாய் கிழமையோடு இந்த தேய்பிறை தசமி சேர்ந்து வந்திருப்பதால் இந்த திதிக்கு உண்டான அதி தேவதையை வழிபடும்போது, நமக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நாளைய தினம் உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை, இந்த அம்பாளின் நாமத்தைச் சொல்லி வேண்டுதல் வைத்தால், அந்த கஷ்டம், அந்த அம்பாளின் கரங்களால் வதம் செய்யப்படும் என்பதும் நம்பிக்கை. வறுமை பஞ்சம் எதிரி தொல்லை நீங்க நாளை எந்த நேரத்தில், எந்த அம்பாளை எப்படி வழிபாடு செய்வது தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு

முதலில் இந்த தேய்பிறை தசமி திதி நாளை எந்த நேரத்தில் தொடங்கி, எந்த நேரத்தில் முடிவடைகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நவம்பர் 7ஆம் தேதி 2023 செவ்வாய்க்கிழமை காலை 7:15 மணிக்கு தொடங்கக்கூடிய தசமி திதியானது, புதன்கிழமை காலை 9:19 மணி வரை இருக்கிறது.

பொதுவாகவே சக்தி தேவதையின், அங்க தேவதைகள் இரவு நேரத்தில் தான் சக்தி பெறுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் இந்த வழிபாட்டை நாம் இரவு நேரத்தில் தான் மேற்கொள்ளப் போகின்றோம். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 12 மணி வரை நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறதோ அதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி, பணக்கஷ்டம், மன கஷ்டம் உறவுகளுக்குள் சண்டை அல்லது வேலையில் பிரச்சனை இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏதாவது ஒரு பிரச்சனையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக்கோங்க. அதில் பச்சை நிற பேனாவைக் கொண்டு இந்த அம்பாளின் நாமத்தை எழுத வேண்டும். இந்த அம்பாள் யார் என்று நீங்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள் போதும். அன்னை லலிதாம்பிகையின் அங்க தேவதைகளில் பன்னிரண்டாவது தேவதையாக, இந்த அம்பாளை சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த அம்பாளின் பெயர் வஜ்ரேஸ்வரி. சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு, மாணிக்க கற்கள் பதித்த கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு வறுமையையும் எதிரியையும் பஞ்சத்தையும் விரட்டி அடிக்க கூடிய வஜ்னேஸ்வரி அன்னையைத்தான் நாம் நாளை வழிபாடு செய்யப் போகின்றோம். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த வெள்ளை காகிதத்தில் ‘ஓம் மஹா வஜ்ரேஸ்வரியே போற்றி’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும். உங்களுக்கு எழுத வாய்ப்புகள் இல்லை.

இதையும் படிக்கலாமே: வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்

எழுத முடியாது என்பவர்கள் இந்த மந்திரத்தை மனதார வாயால் உச்சரித்தால் கூட போதும். அந்த அம்பாள் உங்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கி விடுவாள். உங்களுடைய கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைப்பாள். நாளைய தினம் உங்கள் தீராத கஷ்டம் தீர எளிமையான இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் மன நிம்மதி பெறுவீர்கள் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -