மகாலஷ்மியின் அம்சமான வலம்புரி சங்கை வீட்டில் இப்படி வைத்திருந்தால் தாயாரின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். தாமதிக்காமல் வலம்புரி சங்கை வைத்து இந்த வழிபாட்டை செய்து விடுங்கள் தாயாரின் அனுக்கிரகம் கிடைக்கும்.

sangu
- Advertisement -

மகாலட்சுமி அம்சமாக கருதப்படுவது வலம்புரி சங்கு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. மகாலட்சுமி உயிரோட்டமாக இருக்கக்கூடிய பொருளாகவும் இந்த வலம்புரி சங்கு கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சங்கை நம் வீட்டில் வைத்து நாம் வணங்கும் போது, அந்த சங்கை முறையாக பராமரித்தோம் என்றால் நம் வாழ்வில் பல வெற்றிகளை அடையலாம். அதே சமயம் அந்த சங்கை அலட்சியம் செய்தோம் என்றால் நம் வாழ்வில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். இந்த பதிவில் நாம் வலம்புரி சங்கில் என்னென்ன செய்ய வேண்டும் என்றும், என்ன செய்யக் கூடாது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வலம்புரி சங்கில் செய்யக்கூடிய செய்யக்கூடாத செயல்கள்:
முதலில் நாம் வலம்புரி சங்கில் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்ப்போம். நம் வீட்டில் வைத்திருக்கும் வலம்புரி சங்கை காலியாக வைத்திருக்கக் கூடாது. சங்கை நாம் தரையிலோ அல்லது தட்டில்லாமலோ வைக்கக் கூடாது. வலம்புரி சங்கு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதற்கு அபிஷேகம் செய்யாமல் இருக்க கூடாது. மேலும் வலம்புரி சங்கில் அழுக்குகளோ, தூசிகளோ படிய விடக் கூடாது. வலம்புரி சங்கில் துர்நாற்றம் ஏற்படக் கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால், அது நமக்கு கடன் பிரச்சனைகளை அதிகரிக்கும். வலம்புரி சங்கை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் எதிர்மறையாக மாறும். ஒரு வேளை நீங்கள் தெரியாமல் இதை செய்து இருந்தால் உடனே இந்த முறையில் சரி செய்து இந்த சங்கு வழிபாட்டை தொடருங்கள் தாயாரின் அனுக்கிரகம் கிடைக்கும்.

- Advertisement -

வலம்புரி சங்கில் செய்யக்கூடிய செயல்கள்:
வலம்புரி சங்கை பொதுவாக பூஜை அறையின் மத்திய பகுதியில் தான் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது ஒரு தட்டை எடுத்து அதில் மஞ்சள் கலந்து பச்சரிசியை போட்டு அதற்கு மேல் தான் வலம்புரி சங்கை வைக்க வேண்டும். பொதுவாக வலம்புரி சங்கினுள் வைக்கப்படும் பொருட்கள் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆதலால் சிலர் சங்கிற்குள் நாணயங்களை வைப்பார்கள். அவ்வாறு வைப்பதை தவிர்த்து விட்டு செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அம்சமான பொருட்களை வைப்பதன் மூலம் மகாலட்சுமி நிரந்தர வாசம் புரிவாள். அவ்வாறு சங்கிற்குள் வைப்பதற்கு நமக்கு தேவையான பொருட்கள் வெற்றிலை, துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் பன்னீர். இவை அனைத்துமே மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுபவை.

முதலில் சங்கு நிறைய பன்னீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 2 ஏலக்காய்களை நசுக்கி போட வேண்டும். பிறகு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட வேண்டும். சங்கின் நுனியும் வெற்றிலையும் நுனியும் ஒன்றாக இருப்பது போல் சங்கின் மேல் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் துளசியை வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் அந்த இடமே நறுமணம் மிகுந்த இடமாக மாறி மகாலட்சுமி நம்முடன் நிரந்தர வாசம் புரிவாள். இவற்றை தினமும் மாற்ற வேண்டும். மறுநாள் மாற்றும் போது இந்த பன்னீர், வெற்றிலை, துளசி இவற்றை ஏதாவது ஒரு தொட்டியில் இருக்கும் செடியில் ஊற்ற வேண்டும். மனிதர்களின் கால் தடம் படாத இடமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் வலம்புரி சங்கை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அதாவது சாதாரண தண்ணீரை வைத்து சுத்தம் செய்யலாம். மேலும் சங்கை துடைப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் பல வகைகளான அத்தர், அதாவது மனம் வீசும் திரவியங்கள் கிடைக்கின்றது. அந்த திரவியங்களை வைத்து நாம் வலம்புரி சங்கை துடைத்து பராமரித்தோம் என்றால் அந்த சங்கில் இருந்து எந்த வித துர்நாற்றமும் ஏற்படாது. எப்பொழுதும் வாசனை மிகுந்து இருக்கும். கட்டாயமாக வலம்புரி சங்கிற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

வலம்புரி சங்கிற்கு பூஜை செய்ய உகந்த நாட்களாக கருதப்படுவது பௌர்ணமி தினமே. பௌர்ணமி அன்று சங்கிற்கு அதி அற்புத சக்திகள் கிடைக்கும். அந்த நாளில் நாம் அபிஷேகம், அர்ச்சனை செய்யும் பொழுது அந்த சங்கு நமக்கு அதி அற்புத பலனை தரும். அபிஷேகம் செய்வதற்கு நம்மால் இயன்ற பொருட்களை வைத்து செய்யலாம். இதை வைத்து தான் செய்ய வேண்டும் என்று இந்த அவசியமும் இல்லை. தண்ணீர், பன்னீர், சந்தனம், காய்ச்சாத பச்சை பால் வைத்துக் கூட நாம் அபிஷேகம் செய்யலாம். நெய்வேத்தியமாக சங்கிற்கு நாம் தயிர் சாதத்தை வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் அல்லது சந்திரனின் அஷ்டோத்திரத்தை கூறலாம்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் சுவாமி படங்களை இப்படி மட்டும் தனியாக வைக்காதீர்கள்! குடும்பத்தில் ஒற்றுமை தடைப்படும் தெரியுமா?

இவ்வாறு தொடர்ந்து நாம் மூன்று மாதங்கள் பௌர்ணமி தினத்தில் வலம்புரி சங்கிற்கு பூஜை செய்யும் பொழுது, நம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த வலம்புரி சங்கு ஏற்படுத்தி, நாம் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ அருள் புரியும்.

- Advertisement -