பண பிரச்சனையை தீர்க்கும் வலம்புரி சங்கு பரிகாரம்

valampuri sangu
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக விளங்குவது பணம்தான். அப்படிப்பட்ட பணத்தை நாம் முறையாக கையாண்டு நம் வசம் தக்க வைத்துக் கொண்டால் பல பிரச்சனைகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினையை தீர்ப்பதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற விரும்புபவர்கள் அவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து வழிபட வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்ற வலம்புரி சங்கை வைத்து எப்படி வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு இல்லத்தில் மகாலட்சுமி தாயாரின் வாசம் நிறைந்திருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வ செழிப்பிற்கு எந்த வித குறைவும் இருக்காது. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற விரும்புபவர்கள் அவர் விரும்பிய படி இருக்க வேண்டும். அதிலும் மிகவும் குறிப்பாக அவருக்கு விருப்பமான பொருட்களை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலமும் அருளை பெற முடியும். அப்படி மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் வலம்புரி சங்கு. மகாலட்சுமி தாயாரை போலவே கடலில் இருந்து உற்பத்தியாக கூடிய ஒன்று.

- Advertisement -

இதற்கு நம்முடைய உள்ளங்கை அளவிற்கு இருக்கக்கூடிய வலம்புரி சங்கு மூன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது நாமே நேரடியாக சென்று வாங்குவதை விட குருமார்கள் சங்கிற்குரிய சாப நிவர்த்தி பூஜைகளை செய்து பிறகு வாங்குவது நல்லது. இந்த சங்கை வளர்பிறையில் வரக்கூடிய நாட்களில் வாங்க வேண்டும். வீட்டிற்கு வாங்கி வந்த அன்றைய தினம் பசுஞ்சானத்தை எடுத்து மூன்று உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாண உருண்டையிலும் இந்த சங்கை புதைத்து வைக்க வேண்டும்.

ஒவ்வொரு சங்கிற்கும் ஒவ்வொரு சாண உருண்டை என்ற வீதம் 3 சங்குகளையும் சாணத்தில் புதைத்து வைக்க வேண்டும். 24 மணி நேரம் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் இந்த சங்கை எடுத்து சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக மூன்று டம்ளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது கண்ணாடி டம்ளராக இருந்தால் மிகவும் சிறப்புக்குரியது. அந்த டம்ளரில் சுத்தமான பன்னீரை ஊற்றுங்கள். சுத்தம் செய்து வைத்திருக்கும் சங்குகள் மூன்றையும் அந்த மூன்று டம்ளரில் இருக்கக்கூடிய பன்னீரில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

சங்கு பன்னீரில் 24 மணி நேரம் இருக்க வேண்டும். சங்கு மூழ்கும் அளவிற்கு பன்னீர் இருக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து சங்கை வெளியில் எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு மறுபடியும் மூன்று டம்ளர்களை எடுத்து அதில் பசும்பாலை ஊற்றி அந்த பாலிற்குள் இந்த மூன்று சங்குகளையும் போட வேண்டும். இதுவும் 24 மணி நேரம் அப்படியே இருக்கட்டும். 24 மணி நேரம் கழித்து இந்த சங்கை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.

ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் கடல் மண்ணை பரப்பவிட்டு அதற்கு மேல் புதிதாக வாங்கி வந்த கல்லுப்பை பரப்ப வேண்டும். அடுத்ததாக நம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சங்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த கல் உப்பின் மேல் வைத்து விட வேண்டும். இப்படி வைக்கும் பொழுது சங்கை வெறும் சங்கை வைக்க கூடாது. அதில் மஞ்சள் தண்ணீர், சுத்தமான தண்ணீர், பன்னீர், நாணயங்கள், தங்க காசு, வெள்ளி காசு இவற்றில் ஏதாவது ஒன்றை போட்டு வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ வளர்பிறை திருதியை வழிபாடு

வீட்டு பூஜை அறையில் நாம் எப்பொழுதெல்லாம் பூஜை செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த சங்கிற்கும் தூப தீபா ஆராதனை காட்ட வேண்டும். மலர்களை சாற்றை வேண்டும். இப்படி நாம் வழிபாடு செய்து கொண்டு வந்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுப போக வாழ்வை வாழ முடியும்.

- Advertisement -