வலிமையான முடியை பெற, வடித்த சாதத்தோடு இந்த 1 எண்ணெயை சேர்த்தாலே போதும்.

hair6
- Advertisement -

டேமேஜ் ஆன முடியை உடனடியாக சரி செய்ய இரண்டு சுலபமான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய முடி வறண்டு போய் வெடிப்பு விட்டு வலு விழுந்து உடைகிறதா. முடி வேர்க்கால்களில் இருந்து ஊட்டச்சத்து இல்லாமல் வளராமல் அப்படியே இருக்கிறதா. அடர்த்தி குறைவாக காணப்படுகிறதா. எந்த பிரச்சனை இருந்தாலும் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய சேதமடைந்த முடி சீக்கிரமே சரியாகி அழகாக சில்க்கியாக வளர தொடங்கி விடும்.

குறிப்பு 1:
இப்போது நாம் ஒரு ஹேர் மாஸ்கை தயார் செய்யப் போகின்றோம். இந்த ஹேர் மாஸ்க் உங்களுடைய டேமேஜான முடியை உடனடியாக சரி செய்யது விடும். இந்த ஹேர் மாஸ்க்கு நான் பயன்படுத்த போகும் பொருள் வடித்த சாதம் – 1/4 கப், விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், அவ்வளவுதான். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வடித்த சாதத்தை போட்டு விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இதை விழுது போல அரைக்க வேண்டும். அதாவது கண்டிஷனர் போல இது நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 வாரம் வரை கெட்டுப் போகாது. ஃப்ரீசரில் வைத்தால் ஒரு மாதம் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால் ஃப்ரீசரில் ஸ்டோர் செய்யும் போது கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தக் கூடாது. இதை தலை முடிக்கு எப்படி அப்ளை செய்வது. தேவையான அளவு இந்த ஹேர் பேக்கை தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ரூம் டெம்பரேச்சரில் சிறிது நேரம் இருக்கட்டும் ரொம்பவும் ஜில்லென்று தலையில் போடாதீங்க.

உங்கள் கையாலேயே ஜெல் போல இருக்கும் இந்த மாஸ்கை எடுத்து உங்களுடைய வேர்கால்களில் படும்படி தேய்த்து கொடுங்கள். அதன் பின்பு முடியின் நுனிபாகம் வரை அப்படியே நீளமாக இந்த ஹேர் பேக்கை போட்டு 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். கொண்டை கட்ட வேண்டாம். 30 நிமிடங்கள் கழித்த பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். பிறகு உங்கள் முடிவில் இருக்கும் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
இந்த ஹேர் பேக்குக்காக எந்த கண்டிஷனர் தேவை என்றாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது மேலே சொன்ன சாதம் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்த நம் கையாலேயே தயார் செய்த கண்டிஷனரும் இதற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் கடையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஹேர் கண்டிஷனரையும் இந்த குறிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். ஹேர் கண்டிஷனர் – 2 ஸ்பூன், செம்பருத்திப்பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன் போட்டு, இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்து நிறைந்த கண்டிஷனரை தலைக்கு எப்படி அப்ளை செய்வது. ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பின்பு, தலைமுடி ஈரமாக இருக்கும் போதே, இந்த பேக்கை தலையின் மேல் பாகத்தில் இருந்து கீழ்ப்பக்கம் வரை, முழுமையாக அப்ளை செய்து கொள்ளுங்கள். அதாவது மயிர்க்கால்களில் படும்படியும் அப்ளை செய்யலாம். கூந்தலின் நுனி முடிவடை அப்ளை செய்து அப்படியே விட்டுவிடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரை ஊற்றி தலையை அலசி விடுங்கள். இந்த செம்பருத்திப் பூ பொடி சேர்த்த கண்டிஷனரை பயன்படுத்திய பின்பு ஷாம்பு போட வேண்டாம்.

இந்த ஹேர் கண்டிஷனர் உங்களுடைய முடி உதிர்வை நிறுத்தி முடியை கருகருன்னு வளர செய்ய உதவியாக இருக்கும். மேலே சொன்ன இரண்டு குறிப்புகளில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பின்பற்றுங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த கண்டிஷ்னரை தாராளமாக பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதேனும் வந்துவிடுமோ என்ற எந்த பயமும் தேவை கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. அழகான முடி அனைவருக்கும் கிடைக்கும்.

- Advertisement -