ராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்

Vana durgai Amman
- Advertisement -

திண்டிவனத்திற்கு அருகே இருக்கிறது கரியமலை எனும் மலைப்பகுதி. சுற்றிலும் காடுகளால் சூழப்பட்ட இந்த மலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளாக சித்தர்கள் வழிபட்டு வந்த வனதுர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் இச்சிறிய கோவிலில் ஞாயிற்று கிழமை ராகு கால நேரத்தில் செய்யப்படும் பூஜை மிகவும் விசேஷமானது. அப்போது இங்கு வந்து இந்த வனதுர்கையை வழிபடுவதால் ஒருவருக்கு பல நன்மைகள் ஏற்படும் என கூறுகிறார்கள்.

- Advertisement -

கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு ஞாயிற்று கிழமை ராகு கால பூஜை நேரத்தில், இங்கு வழிபட்ட பக்தர் ஒருவர் எதேச்சையாக இக்கோவிலை புகைப்படம் எடுத்த போது, அதில் சித்தர்கள் அருவமாக அந்த வனதுர்க்கை அம்மனை வழிபடுவது போன்ற ஒரு காட்சி இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இக்காட்சி கொண்ட அந்த புகைப்படம் மற்றும் சித்தர்களை பற்றிய செய்தி அப்போது அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் வெளியாகி இக்கோவிலை பற்றி பலரும் அறிந்து கொள்ள செய்தது.

இங்கு கோவில் கொண்டிருக்கும் வனதுர்க்கை அம்மன் தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் பல அற்புதங்களை புரிந்திருப்பதாக கூறுகிறார்கள். ஒரு பக்தருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி அதை அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், இக்கோவிலுக்கு வந்து இந்த அம்மனை வேண்டி சிறிது நேரம் அம்மனை மனதில் வேண்டி தியானத்தில் இருந்த பிறகு, சிறிது நேரம் கழித்து இவர் சிறுநீர் கழிக்கும் போது அச்சிறுநீரிலேயே சிறுநீரகக்கற்கள் வெளியேறும் என இந்த அம்மன் தனக்கு உணர்த்தியவாறே நடந்ததாகவும் கூறுகிறார்.

இந்த வன துர்கை அம்மன் கோவிலில் ஒரு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. பக்தர்கள் தங்களின் கோரிக்கையை மனதில் வேண்டி இந்த அம்மன் விக்கிரகத்தின் தலையின் மீது ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தால், அது அம்மன் விக்கிரகத்திற்கு வலப்பக்கம் விழுந்தால், வேண்டியவர்களின் எண்ணம் உடனே பலிக்கும் என்றும், அது இடப்புறம் விழுந்தால் அந்த காரியம் நிறைவேற சிறிது காலம் ஆகும் எனவும், ஒரு வேளை அந்த எலுமிச்சை பழம் சிலைக்கு பின்புறமாக விழுந்தால் பக்தர்களின் அந்த கோரிக்கை நிறைவேறாது என இந்த வனதுர்க்கை அம்மன் உணர்த்துவதாக கூறப்படுகிறது.

- Advertisement -