வாங்கும் தங்க நகைகள் நிலைத்திருக்க செய்ய வேண்டியவை.

buying gold
- Advertisement -

பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆண்கள் ஆசைப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால் பெண்களோ பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும். சேர்த்து வைத்த பணத்தை தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை என்றென்றைக்கும் நிரந்தரமாக தங்களுடனே இருக்கும் அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தங்கத்தை வாங்குவதற்கு முன்பு எந்தெந்த விஷயங்களை கவனித்தால் வாங்கிய தங்கம் நம்முடன் நிலையாக நிலைத்திருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அந்த வேலையை செய்வதற்கு முன்பு சில விஷயங்களை கவனித்து பிறகு செய்வோம். எடுத்துக்காட்டாக எமகண்டத்தில் வீட்டை விட்டு கிளம்ப கூடாது. இந்த திசையில் இன்றைக்கு சூலம் அந்த திசை பக்கம் செல்லக்கூடாது. பிறகு ராசி நட்சத்திரம் இந்த மாதிரி சில விஷயங்களை கவனித்து பிறகு நல்ல விஷயங்களை செய்வோம்.

- Advertisement -

அதேபோல்தான் நாம் தங்கம் வாங்கும் போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். எந்த நாட்களில் தங்கம் வாங்கலாம்? எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்? எந்த திதியில் தங்கம் வாங்கலாம்? இந்த விஷயங்களை கவனித்து நாம் வாங்கினால் நம்முடைய தங்கம் என்றுமே நிரந்தரமாக நம்முடன் இருக்கும். நம்முடன் மட்டும் அல்லாமல் நம்முடைய பிற்கால சந்ததிகளுக்கும் அந்த தங்க நகை சென்று சேரும் என்று கூறப்படுகிறது.

தங்கம் வாங்க உகந்த நட்சத்திரம்: அஸ்வினி, புனர்பூசம், அஸ்தம், திருவோணம், அவிட்டம், சதயம், அஸ்வினி, பூசம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் தங்கம் வாங்க உகந்த நட்சத்திரங்கள் ஆகும்.

- Advertisement -

தங்கம் வாங்க உகந்த திதி: பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்ணமி போன்ற திதிகள் உகந்த திதிகள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற மூன்று கிழமைகளும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. ஆக இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து வரும் நாளை நாம் தேர்வு செய்து அந்த நாளில் குளிகை நேரத்தில் தங்கத்தை வாங்கினோம் என்றால் தங்கம் நம் வீட்டில் அதிகரித்துக் கொண்டே செல்லும். அது மட்டும் அல்லாமல் வாங்கிய தங்கம் நம்முடன் நிரந்தரமாக நிலைத்து இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாங்கி வந்த இந்த தங்கத்தை வீட்டிற்கு வந்ததும் மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களில் போட வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த நகைகளை அணிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் நாம் அந்த நகைகளை அணிய வேண்டும். இவ்வாறு செய்தோம் என்றாலும் நம் வீட்டில் தங்கம் நிரந்தரமாக தங்கும். வாங்கிய தங்கம் நிரந்தரமாக நம்முடன் நிலைத்து நிற்கும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளின் வன்மம் நீங்க நிலை வாசலில் வசம்புடன் இதை சேர்த்து கட்டுங்கள்.

இந்த எளிமையான குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு நாமும் தங்கத்தை தாராளமாக நம் வீட்டில் வாங்கி சேர்த்து வைப்போம்.

- Advertisement -