வாரா கடனையும் வசூலித்துத் தரும் சூரிய பகவான் மந்திரம்! 108 நாட்களில் கைமேல் பலன்.

சிலரிடம், நாம் கொடுத்த கடனை வாராக்கடன் என்றே முடிவு செய்து வைத்திருப்போம். கடனைக் கொடுத்து பல வருடங்களாகியும், அந்த கடன் தொகை நமக்கு திரும்பவும் வராத சூழ்நிலையில் என்ன செய்வது? அதை நஷ்டக் கணக்கு, என்று வாராக் கடனில் எழுதி தான் வைக்க முடியும். கடன் தொகையை வாங்கியவர், கண்ணுக்கு தெரியாமல் எங்கேயாவது சென்று விட்டால்! அந்த கடன் வரவே வராது என்று கடன் கணக்கை முடித்து விட வேண்டியதுதான். உங்களுக்கும் இதே சூழ்நிலை உள்ளதா? யாராவது கடன் தொகையை வாங்கிவிட்டு ஏமாற்றி உள்ளார்களா? உங்களுக்கான பரிகாரம் தான் இது.

sunrise

காலையில் சூரியன் உதயமாகும் போது 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து விட்டு, சூரிய நமஸ்காரம் செய்த பின்பு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதற்கு முன்பு ஒரு கைப்பிடி அளவு உப்பைக் உங்கள் உள்ளங்கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய பகவானை மனதார நினைத்து கொண்டு, உப்பை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி சாமி கும்பிடுவது போல், வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது அஞ்சலி முத்திரை. இதே முத்திரையோடு, கையில் உப்புடம் பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ!

வராக்கடனை திரும்பவும் பெற சூரிய பகவானின் மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
‘அந்த நபரின் பெயர்’ ஆகர்ஷய ஆகர்ஷய!

mantra-signature

எடுத்துக்காட்டாக அந்த நபரின் பெயர் ‘ராஜா’ என்றால்,
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
‘ராஜா’ ஆகர்ஷய ஆகர்ஷய!

- Advertisement -

108 முறை இந்த மந்திரத்தை குறிப்பிட்ட அந்த நபரின் பெயரோடு உச்சரித்து, உங்களுடைய பூஜையின் இறுதியில் கடன் தொகை முழுவதும் கூடியவிரைவில் வசூலாக வேண்டும் என்று சூரிய பகவானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக உங்களை ஏமாற்றிய அந்த நபரே மனம் மாரி, கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாகவாவது உங்களுக்கு திருப்பி தந்து விடுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

men greeting sun

உங்கள் வீட்டில் இடவசதி இருந்தால் சூரிய பகவானை பார்த்துக்கொண்டே மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இடவசதி இல்லாதவர்கள் ஒரு முறை சூரிய பகவானைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது தவறு ஒன்றுமில்லை. மந்திரத்தை உச்சரித்து முடித்து விட்டு, இறுதியாக உங்கள் கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். இது மிகவும் முக்கியமான குறிப்பு. கண்டிப்பாக கையில் உப்பை வைத்து கொண்டு இந்த மந்திரத்தைச் சொன்னால் மட்டுமே பலன். அந்த உப்பை இறுதியாக தண்ணீரில் மட்டுமே கறைக்க வேண்டும்.

salt

நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன். பலவருடங்களாக வராத கடனுக்கு 108 நாள் பரிகாரம் செய்து, கடனை திரும்ப பெற முடியுமென்றால் இந்த மந்திரத்தை உச்சரிப்பது எந்த ஒரு தவறும் இல்லையே! நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சொந்த வீடு வாங்க வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan prachanai theera manthiram Tamil. Kadan thirumba pera Tamil. Surya bhagavan mantras Tamil. Vara kadan Tamil.