செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும் இந்த வராகி அம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது எவ்வித பலனை கொடுக்கும் என்பது தெரியுமா?

varahi
- Advertisement -

வராஹி அம்மனை அதிகமாக தொழுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், முதன்முறையாக தான் செய்ய விரும்பும் ஒரு காரியம் நிச்சயம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தான் வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு இந்த வராகியம்மன் அனைத்து காரியத்தையும் வெற்றியாக்கி கொடுப்பதில் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக பார்க்கப்படுகிறார்.

வராகி அம்மனை தொழுவதன் மூலம் நிச்சயம் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் நம்மிடம் நெருங்கி வரும் எதிரிகளின் தீய எண்ணங்களை தவிடு பொடியாக்கியதிலும் வல்லமை பொருந்திய கடவுளாகவும் வராகியம்மன் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இப்படி தன்னை நம்பி முழுமனதுடன் வேண்டிக்கொள்ளும் தனது பக்தர்களுக்கு எதிலும் வெற்றியை கொடுக்கும் இந்த வராஹி அம்மன் சிலையை சிலர் வீட்டில் வைத்து வணங்கி வருகின்றனர். இவ்வாறு வராஹி அம்மன் சிலையை வீட்டில் வைத்து வணங்குவதன் மூலம் கிடைப்பது நன்மையா தீமையா என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முந்தைய காலத்தில் எல்லாம் அரச மன்னர்கள் போருக்குச் செல்வதற்கு முன் வராஹி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர் தான் போருக்குச் செல்லத் துவங்குவார்கள். இவ்வாறு அவர்கள் செய்யும் இந்த பூஜையின் பலனாக அவர்கள் போரில் வெற்றி பெறுவது உறுதியாகும். எனவே வராகி அம்மனுக்கு பூஜை செய்வதை பல மன்னர்களும் வழக்கமாக வைத்திருந்தனர்.

- Advertisement -

அவ்வாறு இக்காலத்து மக்களும் வராஹி அம்மனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மற்ற தெய்வங்களைப் போன்ற உடல் அமைப்பு இந்த தெய்வத்திற்க்கு இருப்பதில்லை. இதன் உடல் முழுவதும் மனித உருவிலும், தலை மட்டும் பன்றி உருவில் இருக்கும். எனவே இந்த இரண்டு உயிர்களின் உடல் தோற்றத்தையும் ஒன்று சேர கொண்டிருப்பதால் இந்த அம்மனின் சக்தி அதிகப்படியாக இருக்கும்.

வராஹி அம்மன் சக்தி மட்டும் அதிகமாக இருப்பதில்லை. அந்த அம்மனின் கோபமும் மற்றவர்களை அழிக்கின்ற வகையில் இருக்கும். இந்த அம்மனின் கோபத்தை சாந்தப்படுத்துவது என்பது சுலபமான காரியம் கிடையாது. எப்பொழுதும் வராஹி அம்மன் மிகவும் உக்கிரமாக தான் இருப்பாள். இந்த தெய்வத்தை உக்கிரமான தெய்வம் என்று தான் பலரும் கூறுவர்.

எனவே இந்த அம்மனின் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வராகியம்மனின் கோபத்தை முதலில் சாந்தப்படுத்தி, அந்த அம்மன் சிலைக்கு வேண்டிய அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து சாந்தமான நிலைக்கு வந்த பிறகு தான் வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

இப்படி முறையான பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து அம்மனை சாந்த சாந்த நிலைப்பு கொண்டுவராமல் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் சில துன்பங்களும் ஏற்படத்தான் செய்யும். வராஹியம்மன் கோபம் நமக்கு ஒரு சில எதிர்மறை செயல்பாடுகளையும் கூட தர வல்லதாகும். எனவே உங்கள் வீட்டில் வராஹி அம்மன் சிலை வைத்திருந்தால் முதலில் அந்த அம்மனை சாந்தி படுத்தவதற்க்கான முறையான பூஜைகளை செய்து முடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -