வாராஹியை நம்பி வழிபாடு செய்ய துவங்கி விட்டால் உங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை, அவள் பார்த்துக் கொள்வாள். துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தமாகாது, துன்பங்களை எல்லாம் அவள் வாங்கிக் கொண்டு, இன்பங்களை மட்டும் உங்களுக்கு கொடுத்து விடுவாள். நமக்கெல்லாம் தாய் போல இருக்கும் அந்த பராசக்தி வார்த்தாளி தேவியை வேண்டி செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
நிச்சயமாக உங்கள் குடும்ப கஷ்டங்கள், குடும்ப பாரங்கள் குறைந்து, வீட்டில் நிம்மதி பிறப்பதை மனதார உணருவீர்கள். ஒரு அம்மா எப்படி பிள்ளைகளுக்கு தீங்கு நினைக்க மாட்டாளோ, அதே போல தான் வாராஹித்தாய் தன்னை நம்பி வந்த பக்தர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டாள்.
செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு
செவ்வாய்க்கிழமை ஒரு எலுமிச்சம்பழம் கடையிலிருந்து பேரம் பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள். கரும்புள்ளி இல்லாமல் வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை, தண்ணீரில் கழுவி விடுங்கள். கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு, “வாராகியே துணை” என்று மூன்று முறை சொல்லிவிட்டு, அந்த எலுமிச்சம் பழத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து மனதார வாராஹியை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் உங்களுடைய வீட்டில் இருக்கும் எல்லா அறைகளிலும் காண்பிக்க வேண்டும். உள்ளங்கைகளை திறந்து வைத்துக் கொண்டு, நடுவே அந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு வீட்டின் எல்லா இடங்களிலும் இந்த எலுமிச்சை பழத்தை காண்பித்து ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு வரவேற்புரையில் வைத்து விடுங்கள். எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் எல்லா அறைகளிலும் காட்டுகிறீர்கள் அல்லவா அப்போது நீங்கள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
வராகி மந்திரம்
வார்த்தாளி வார்த்தாளி, வராகமுகி, பஞ்சமி தேவி, வாராஹி தாயே வீட்டைக் காப்பாய்.
செவ்வாய்க்கிழமை காலை இந்த மந்திரத்தை சொல்லி இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட்டீர்கள். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு மேல் ஒரு சின்ன அகல் விளக்கில் கற்பூரம் ஏற்றி வைத்து, அந்த நெருப்பில் இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு பொசுக்கி விடுங்கள். இந்த பழம் கற்பூரத்தில் அவ்வளவு எளிதில் எரியாது.
இருந்தாலும் அந்த எலுமிச்சம் பழம் முழுவதும் கருகும் வரை அதை நெருப்புக்கு இறையாக்கிவிட்டு, அந்த மிச்ச மீதி இருக்கும் சாம்பலை வீட்டிற்கு வெளிப்பக்கம் கொட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் வீட்டில் செய்தால் போதும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம், கெட்ட சக்தி விலகும். கண் திருஷ்டி விலக்கும். எதிரி தொல்லை விலகும்.
இதையும் படிக்கலாமே: லாபம் பெருக கிருத்திகை வழிபாடு
ஏவல் பில்லி செய்வினை போன்ற பாதிப்புகள் இருந்தால் கூட அதிலிருந்து உங்கள் வீடு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும். இந்த பரிகாரத்திற்கு பிறகு உங்கள் வீட்டை பாதுகாக்க வேண்டிய வேலையை வாராகிதாய் பார்த்துக் கொள்வாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.