வறுமையை நீக்கும் சிவ மந்திரம்

sivan manthiram
- Advertisement -

“கொடிது கொடிது வறுமை கொடிது” என்று நம்முடைய அவ்வை பாட்டி கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு கொடுமையானது வறுமை என்று அன்றைய காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வறுமை இன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான நோயைவிட கொடுமையான ஒன்றாக திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் கையில் பணம் இருந்தால் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். இதே பணமே இல்லாத பட்சத்தில் நம்மால் அன்றாட வாழ்க்கையை கூட மேற்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவும் வறுமை நீங்கவும் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வறுமை நீங்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக வேண்டும். மகாலட்சுமியின் அருள் மட்டும் இருந்தால் பத்தாது. குபேர பகவானின் அருளும் பரிபூரணமாக வேண்டும். இப்படி இவர்கள் இருவரின் அருளையும் பெறுவதற்கு பல வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அதேபோல் பரிகாரங்களும் இருக்கின்றன. இந்த வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் செய்வதற்கு கூட தங்களால் இயலாது அந்த அளவிற்கு வறுமையில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் போதும்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கும் குபேர பகவானுக்கும் செல்வத்தை வாரி வழங்கக் கூடிய ஆற்றல்மிக்க தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் ஐஸ்வரேஸ்வரர் என்று கூறுகிறோம். இவரிடம் இருந்துதான் மகாலட்சுமிக்கு ஐஸ்வரியம் கிடைத்தது என்று கூறப்படுகிறது. இதே போல் அனைத்து விதமான செல்வ செழிப்பிற்கும் அதிபதியாக திகழக்கூடிய குபேர பகவான் அந்த செல்வத்தை பெறுவதற்கு சிவபெருமானை நினைத்து தவம் இருந்து தான் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட சிவபெருமானை நாமும் முழு மனதோடு நம்பி வழிபட்டால் நம்முடைய வறுமையையும் அவர் நீக்குவார். இந்த மந்திர வழிபாட்டை நாம் அனுதினமும் செய்ய வேண்டும். இதை ஆரம்பிக்கும் நாள் சிவபெருமானுக்குரிய வளர்பிறை திங்கட்கிழமை அன்று ஆரம்பிக்கலாம். அப்படி இயலாத பட்சத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களை தேர்வு செய்து ஆரம்பிக்கலாம். இவ்வாறு ஆரம்பிக்கும் பொழுது அன்றைய நாள் சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் நமசிவாய ஆதி சிவாய சிம் அம் சர்வ ஐஸ்வர்யமும் மம வசி நம ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே: துன்பம் விலக சொல்ல வேண்டிய மந்திரம்

முழு நம்பிக்கையுடன் சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் வறுமை என்பது படிப்படியாக நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

- Advertisement -