வருமானம் தடையில்லாமல் வருவதற்கும், பணம் பெருகிக்கொண்டே இருப்பதற்கும் உங்கள் இல்லத்தில் லட்சுமி குபேர பூஜையை இப்படி முறையாக செய்து வாருங்கள்

gubera
- Advertisement -

பணம் என்பது நமது வீட்டில் தடையில்லாமல் வந்து கொண்டிருந்தால் மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். பணம் வருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் நமது இயல்பான வாழ்க்கை அனைத்தும் தடுமாறி விடும். அவ்வாறு வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை நிலவி கொண்டிருந்தால் மட்டுமே மாதம்தோறும் நல்ல வருமானம் பெற முடியும். அங்கு ஏதாவது பிரச்சனை என்றாலோ, அல்லது நாம் தொழில் செய்யும் நிறுவனம் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தாலும் நமக்கு வருகின்ற வருமானத்தில் பிரச்சனை ஏற்படும். இவ்வாறு பிரச்சினை என்பது எந்த விதத்தில் வேண்டுமானாலும் வந்து விடலாம். அதுபோல நான் சம்பாதித்து வைத்த பணம் அனைத்தும் கரைந்து விடாமல் அவற்றை வைத்து பல மடங்கு இலாபம் பெறுவதற்கும் வழி கிடைக்க வேண்டும். இவ்வாறு அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த லட்சுமி குபேர பூஜையை தவறாமல் செய்து வந்தால் நிச்சயம் நமது வீட்டில் வருமானத்திற்கு தடை என்பதே இருக்காது.

அவ்வாறு லட்சுமி என்பவள் பொன், பொருள், செல்வம் அனைத்திற்க்கும் உரிய தேவதையாவார். மகாலட்சுமி அன்னையின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் பணக்கஷ்டம் என்பது இருக்காது. மகாலட்சுமி வாசம் செய்யும் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருக்கும். எனவே லட்சுமி தேவியின் அருளைப் முழுவதுமாக பெற வேண்டும்.

- Advertisement -

அது போல அனைத்து கடவுள்களின் செல்வத்திற்கும் பாதுகாவலனாக இருப்பவர் குபேரர். குபேரரின் அருளைப் பெற்றுவிட்டால் நமது வாழ்க்கை எப்போதும் இன்பமாய் இருந்து கொண்டிருக்கும். எனவே வருடத்திற்கு ஒரு முறை அல்லது என்றாவது விசேஷ நாட்களில் லட்சுமி குபேர பூஜையை ஒருமுறை செய்துவிட்டால் போதும். அந்த வருடம் முழுவதும் நமக்கு பணத்திற்கு தட்டுப்பாடு இருக்காது.

இதற்காக முதலில் வடக்கு திசை நோக்கி மகாலட்சுமி அன்னையின் திருவுருவப் படத்தையும், குபேரரின் உருவச் சிலையையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றிற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு வலது புறத்தில் குபேர கட்டத்தையும், இடது புறம் குபேர கோலத்தையும் வரைந்து கொள்ள வேண்டும். குபேர கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

குபேர கட்டத்தில் நான்கு புறங்களிலும் ஸ்ரீ என்று எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு கட்டத்தில் நடுவிலேயும் எண்களை மறக்காத வண்ணம் சிறிதளவு மலர் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் 108 ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து, அவற்றின் மீது சிறிதளவு பூக்களை வைத்து விடவேண்டும். பிறகு நெல்லிக்கனி, மா, பலா, வாழை மற்றும் சில பழங்களை வைத்து படைக்க வேண்டும். நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு இனிப்பு செய்து வைக்க வேண்டும்.

பின்னர் நிலை வாசலின் வலது புறம் மஞ்சள் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு ஏற்றி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பின்னர் ஒரு சிறிய வாயகன்ற கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு ஐந்து ரூபாய் நாணயமாக எடுத்து “ஓம் லஷ்மி குபேராய நமஹ” என்று சொல்லி பூஜை செய்ய வேண்டும். அப்பொழுது உங்கள் மனதிற்குள் உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டும், லாபம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -