வருமானத்தில் தடை ஏற்பட்டால் வீட்டில் பெருமாளுக்கு இப்படி செய்து பாருங்கள். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்!

நன்றாகப் போய்க் கொண்டிருந்த தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீரென ஏற்படும் தடையால் நிலைகுலைந்து போகலாம். அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து நிறைய திட்டமிடல் உங்களுக்கு இருந்திருக்கும். தொழில், வியாபாரம் மட்டுமல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உரிய வருமானம் வருவதில் தடை ஏற்படும் பொழுது வணங்க வேண்டிய தெய்வம் பெருமாள் ஆவார். பெருமாளை வணங்குபவர்களுக்கு வருமானம் சீராக வந்து கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. வருமான தடை ஏற்படும் பொழுது பெருமாளுக்கு வீட்டில் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money1

வீட்டில் வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென அதில் தடை ஏற்படும் பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் போய்விடும். இது போன்ற காலகட்டத்தில் பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் பூஜை செய்வது நல்லது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினமாக இருப்பதால் இந்த பரிகாரத்தை செய்வது பலன்களை அதிகமாக கொடுக்கும்.

ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பூஜை அறையை சுத்தம் செய்து பெருமாளுக்கு அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை என்பது மிகவும் விசேஷமானது. மஹாலக்ஷ்மி தேவிக்கு ஏலக்காய் மாலை சாற்றுவது வருமான தடையை நீக்கும், செல்வ செழிப்பை உண்டுபண்ணும். எனவே 51, 108 என்கிற எண்ணிக்கையில் உங்கள் மகாலட்சுமி படத்திற்கு ஏற்ப ஏலக்காய்களை எடுத்துக் கொண்டு வரிசையாக மாலை போல் கோர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, சந்தன குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். தனியாக உதிரி துளசி இலைகளை ஒரு தாம்பூல தட்டில் அர்ச்சனைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

Thulasi

பெருமாளுக்கு உரிய 108 ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். விஷ்ணு காயத்ரி மந்திரம் உச்சரிக்கலாம். மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது தட்டில் இருக்கும் துளசி இலைகளை பெருமாள் படத்திற்கும், மகாலட்சுமிக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்யும் போது அதற்குரிய பலன்களும் அதீதமானதாக இருக்கும். நைவேத்தியத்திற்கு தித்திக்கும் இனிப்பு பொங்கலை சுட சுட வாழை இலையில் வைக்க வேண்டும்.

குத்து விளக்கில் ஐந்து முக திரியிட்டு தீபமேற்றி வழிபட வேண்டும். சுவாமி படத்திற்கு முன்பாக ஒரு பச்சை நிற பட்டுத் துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு தொகையை எடுத்து வையுங்கள். பணத்திற்கு சந்தன குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். 100 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை உங்களிடம் இருக்கும் எந்த ரூபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் புதிதாக பணத்தை வைத்து ஏற்கனவே வைத்திருந்த பணத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

perumal

இது போல் ஏழு சனிக்கிழமைகளில் செய்து வர ஏழுமலையான் உடைய அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலை மாறி சிறப்பாக முன்னேற்றத்திற்கு சொல்லும். வருமானத்தில் ஏற்பட்ட தடைக்கு உரிய பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள், பகைவர்களாக இருந்தவர்கள் அவர்களாகவே இந்தப் பிரச்சினையில் இருந்து விலகி விடுவார்கள். இந்த பரிகாரத்தை செய்த பின் ஏழுமலையானை திருப்பதிக்கு சென்று ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வந்து விடுங்கள். நீங்கள் தனியாக எடுத்து வைத்த பணத்தை காணிக்கையாக உண்டியலில் போட வேண்டும். இப்படி செய்ய திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள் எனவே அதனால் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை காணலாம்.