மார்கழி மாதத்தில் வாசல் தெளித்து கோலம் போடும் முறை என்ன? இப்படி எல்லாம் தெரியாமல் கூட செய்யாதீர்கள்!

nilavasal
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே பெரிய பெரிய கோலங்கள் போட்டு, அழகிய வண்ணங்கள் தீட்டி எல்லோருடைய வாசலும் லக்ஷ்மி கடாக்ஷம் ஆக வைத்திருப்பது தான் நமக்கு முதலாக ஞாபகத்திற்கு வரும். மார்கழி மாதத்தில் தான் இந்த வாசல் தெளித்து பெரிதாக கோலம் போடும் முறையை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தொன்றுதொட்டு அனுதினமும் சாணம் தெளித்து, பூசணிப்பூ கோலம் போட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம். இப்படி கோலம் போடுவதிலும், வாசல் தெளிப்பதிலும் உள்ள முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவவிற்குள் போகலாம்.

face-wash

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது முகத்தை தண்ணீரால் கழுவுவது தான். துடைப்பத்தை கையில் எடுக்கும் முன்பே நீங்கள் முகத்தை ஒரு முறை தண்ணீரில் கழுவி விட வேண்டும். பிறகு வாயையும் கொப்பளித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் துடைப்பத்தை எடுத்து கொண்டு வாசலுக்கு செல்லலாம். தூங்கி வழிந்த முகத்துடன் வாசல் கூட்டி, தெளிக்கக்கூடாது. வாசலுக்கு சென்றதும் முதலில் வாசலில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி ஏதாவது இருந்தால் அதனை தெரு ஓரமாக தள்ளி விட வேண்டும். இரவு நேரத்தில் யாராவது திருஷ்டிக்காக எதையாவது சுற்றி போட்டிருப்பார்கள். இதனால் வாசல் தெளிக்கும் முன்பு ஒருமுறை நன்கு வாசலை சுற்றிலும் நோட்டம் விடுவது நல்லது. முன்பெல்லாம் சாணத்தை கரைத்து தெளிப்பார்கள், இது லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்பதற்காக மட்டுமல்ல, கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. இன்று சாணத்திற்கு நாம் எங்கு போவது? அதற்கு பதிலாக கொஞ்சம் மஞ்சளை தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். எப்பொழுதும் நீங்கள் வாசல் தெளிக்கும் பொழுது மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளிப்பது மிகவும் நன்மைகளை கொடுக்கும்.

Turmeric

குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் தினமும் மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து வாருங்கள், லக்ஷ்மி கடாட்சம் பெருகும். வாசலை கூட்டி பெருக்கும் பொழுது தலைவாசலில் ஆரம்பித்து நீங்கள் தெருவை நோக்கி குப்பைகளை தள்ளி விட வேண்டும். இடது புறத்தில் இருக்கும் குப்பைகளை இடது புறத்திலும், வலது புறத்தில் இருக்கும் குப்பைகளை வலது புறத்தை நோக்கியும் தள்ளி விட வேண்டும். பின்னர் மஞ்சள் தண்ணீரில் வாசல் முழுவதுமாக தெளிக்கப்பட வேண்டும். ஆங்காங்கே தண்ணீர் தெளிக்க படாமல் விட்டுவிடக் கூடாது.

- Advertisement -

மார்கழி மாதத்தில் கோலம் போடும் பொழுது இறைவனின் திரு உருவத்தை பதித்த கோலங்களையும் போடுகிறார்கள். இது போல் போடுவது அவ்வளவு நல்லதல்ல என்று தான் கூற வேண்டும். எல்லோருமே கவனமாக பார்த்து நடப்பார்கள் என்று கூறி விட முடியாது. அதன் மீது கால் வைத்து நடக்கக் கூடும் என்பதால் கூடுமானவரை இது போன்ற கோலங்களை தவிர்ப்பது நல்லது. இப்போது அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்கு கோலம் போடவே முடியாதபடி ஆகிவிட்டது.

kolam2

நீங்கள் காலையில் எழுந்து முகத்தையும், வாயையும் நன்கு அலம்பி விட்டு, உங்கள் வீட்டு வாசலில் மட்டுமாவது கொஞ்சம் மஞ்சள் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறிய அளவில் கோலம் போட்டுக் கொள்ளலாம். அல்லது அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைவருமாக சேர்ந்து கூட்டாக ஒன்றிணைந்து பிரதான வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போட்டு மகிழலாம். இதனால் உறவு வலுப்பெறும், மனமும் சாந்தம் கொள்ளும். இதனால் லட்சுமி கடாட்சம் ஆனது எல்லோருடைய வீடுகளுக்கும் அதிகரிக்கும், கையில் பணம் தங்கும்.

- Advertisement -