வசம்பு பயன்கள்

vasambu

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

வசம்பு பயன்கள்

செரிமான மற்றும் வயிறு பிரச்சனைகள்
நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிமானம் செய்து உடலுக்கு சக்தியை அளிக்கும் பணியை வயிறு செய்கிறது. வயிற்றில் பூச்சி தொல்லைகள், வாயு கோளாறுகள், உப்பசம் மற்றும் அஜீரணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின்பு அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

ஜலதோஷம்

மழை மற்றும் குளிர்காலங்களில் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கிறது. வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.

- Advertisement -

பொடுகு

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.

சிறு குழந்தைகள்

பழங்காலத்தில் பிறந்து 1 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டனர். இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சு திறன் கைவரப்பெறுவதோடு உணவில் இருக்கும் நச்சுகளால் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

கிருமி நாசினி

வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு இயற்கையிலேயே அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை பொருளாகும். சிறு குழந்தைகள் உறங்குகின்ற அறைகளில் வசம்பு பொடியை ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.

பூச்சி கடி

நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடங்களில் வைப்பதாலும், கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறிந்துவிடும்.

வாந்தி, குமட்டல்

ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்டிருக்கும் போதும், வாகனங்களில் பயணம் செய்யும் போதும் சிலருக்கு வாந்தி குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. இப்பிரச்சனை ஏற்படும் போது வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிது இதமான வெண்ணீரை அருந்தினால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

கீல்வாதம்

வாதம் உடலில் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, வலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. வாதத்தில் குறிப்பாக கீல்வாதம் எனப்படும் வாத நோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. வசம்பை காசி கட்டியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

திக்குவாய்

திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய பாதிப்பால் உண்டாகும் ஒரு பிரச்சனையாகும். இந்த திக்குவாய் பிரச்னையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.

காக்கை வலிப்பு, மனநிலை பாதிப்பு

வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மன நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு கொடுத்து வர சித்தம் தெளியும்.

இதையும் படிக்கலாமே:
தேங்காய் எண்ணெய் பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள நெகளுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vasambu uses in Tamil or Vasambu Benefits in Tamil. It is also called as Vasambu nanmaigal in Tamil or Vasambu maruthuva payangal in Tamil or Vasambu maruthuvam in Tamil language.