உங்கள் வீட்டில் துணிமணிகள் பீரோவில் இப்படி இருந்தால் தரித்திரம் துரத்துமாம்! வஸ்திர தோஷம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

unfolded-clothes-lakshmi
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தோஷத்தை உண்டாக்கக்கூடிய தன்மை உண்டு. தோஷம் தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதை நாம் தானம் செய்யும் பொழுது மிகவும் கவனத்துடன் தானம் செய்ய வேண்டும். அத்தகைய பொருட்களில் ஒன்றாக இந்த வஸ்திரம் இருக்கிறது. வஸ்திர தானம் செய்யும் பொழுது கண்டிப்பாக இதையெல்லாம் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வஸ்திர தோஷம் ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க வீட்டில் துணிமணிகளை எப்படி வைத்திருக்க வேண்டும்? எப்படி வைத்திருக்கக் கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவருடைய வீட்டில் வஸ்திரம் என்பது அஸ்திரமாகவும் செயல்படுகிறது. இறந்தவர்களுடைய துணிமணிகளை பயன்படுத்துவதில் ஏராளமான சாஸ்திரங்கள் உள்ளன. ஒருவர் இறந்து விட்டால் அவர்களுடைய துணிமணிகளை என்ன செய்வது? என்று யோசிப்போம். விலை உயர்ந்த புடவைகளை தூக்கிப் போட மனமில்லாமல் அவர்களுடைய குடும்பத்தினர் அதை மறுபடியும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. வஸ்திரத்திற்கு தோஷம் உண்டு எனவே இறந்து போனவர்களுடைய துணிமணிகளை ஒரு முறை ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு கலந்த தண்ணீரில் அலசி எடுத்து நன்கு வெயிலில் காய விட்டு விடுங்கள். அதன் பிறகு அதை பயன்படுத்துவதால் தோஷங்கள் ஏற்படுவது இல்லை.

- Advertisement -

அது போல ஒருவருக்கு நம்முடைய துணிமணிகளை தானம் செய்யும் பொழுது, அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். கிழிந்த துணிமணிகள் அல்லது பயன்படுத்தக் கூட முடியாத அளவிற்கு அழுக்கு நிறைந்த துணிமணிகளை தானம் செய்தால் தரித்திரம் துரத்தும். நானும் தானம் செய்கிறேன் என்ற பெயரில் தரித்திரத்தை இழுத்துக் கொண்டு வரக்கூடாது. கிழிந்த துணிமணிகள் மற்றும் அழுக்கு படிந்த துணிமணிகளை குப்பையிலும், நீர் நிலைகளிலும் தூக்கி போடக் கூடாது. அதை எரித்து விடுவது சரியானது.

துணிமணிகள் வீட்டில் பீரோவில் அழகாக நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தால் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடிக்குமாம். பீரோவில் எப்பொழுதும் துணிமணிகளை மடித்து சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும். சிலருடைய வீடுகளில் பார்த்தால் பீரோ முழுவதும் துணியாக இருக்கும் துணிமணிகள் ஒவ்வொன்றும் மடிக்கப்படாமல் அப்படியே சுருங்கி, சொருகி சொருகி வைத்திருப்பார்கள். இது போல செல்ஃப் அல்லது பீரோக்களில் துணிமணிகளை சொருகி வைத்திருந்தால் அங்கு கண்டிப்பாக தரித்திரம் வரும். வீண்விரயங்களும், கடன் பிரச்சினைகளும் தழைத்தோங்கி காணப்படும் எனவே இது போன்ற செயல்களை ஒருபோதும் செய்து விடாதீர்கள்.

- Advertisement -

துணிமணிகள் சுருக்க சுருக்கமாகவும், ஒரு விதமான நாட்டப்பட்ட வாசனையும் கொண்டு இருக்கக் கூடாது. சிலருடைய துணிமணிகள் சைஸ் சரி இல்லை என்று அப்படியே வைத்திருப்பார்கள் அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்த புடவைகள் ஏராளமாக பீரோவில் இருக்கும். இப்படியான துணிமணிகளின் மீது ஒருவிதமான துர்நாற்றம் ஏற்படும். இந்த நாற்றம் வஸ்திர தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதாக கூறப்படுகிறது எனவே உங்களுக்கு வேண்டாத துணிமணிகளை அவ்வப்போது நீங்கள் அகற்றி விடுவது தான் ரொம்பவும் நல்லது. வருட கணக்கில் அதை வைத்து பாதுகாப்பதால் தரித்திரங்கள் தான் வந்து சேரும். உங்களுக்கும் உபயோகம் இல்லாமல், மற்றவர்களுக்கும் பயன்படாமல் வீணாக்கி கொண்டிருக்க வேண்டாம், இதனால் பிரச்சனைகள் தான் வரும்.

அது போல ஈர துணிகளை ஒரு போதும் வீட்டில் இரவு நேரங்களில் வைத்திருக்கக் கூடாது. இரவில் ஈரத் துணிகள் இருந்தால் அங்கு துர் தேவதைகள் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எனவே ஈர துணிமணிகளை நன்கு பிழிந்து உலர்த்தி விடுங்கள். இதனால் தான் இரவு நேரங்களில் துணி துவைக்க கூடாது என்றெல்லாம் கூறப்படுவது உண்டு. புதிய துணிமணிகளுக்கு மஞ்சள் இட்டு பூஜை அறையில் வைத்து பின் உடுத்திக் கொள்ளுங்கள். அது போல தானம் செய்வதிலும், நல்ல விதமான துணிகளை தானம் செய்து பழகுங்கள். வருடம் ஒருமுறையாவது சகோதர சகோதரிகளுக்கு புது வஸ்திரம் வாங்கி கொடுங்கள். இதனால் குடும்பத்தில் ஏராளமான நன்மைகளும், யோகங்களும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -