- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாஸ்து தோஷம் நீங்க தாந்த்ரீக பரிகாரம்

வாஸ்து தோஷம் நீங்க தாந்த்ரீக பரிகாரம்

- Advertisement -

நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அதற்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். மேலும் குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதே சமயம் நாம் வசிக்கக்கூடிய வீட்டில் எந்த வித தோஷமும் இல்லாமல் இருந்தால்தான் நாம் சம்பாதிக்கக்கூடிய பணம் நம்மிடம் தங்கும், குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்படாமல் இருக்கும். அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என்றாலும் வீட்டில் எந்தவித தோஷமும் இருக்கக் கூடாது. ஒருவேளை அப்படி தோஷம் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அதை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

ஆலயத்திற்கு நிகராக கருதப்படுவது தான் நாம் வசிக்கக்கூடிய இல்லமும். ஆலயத்தில் எப்படி ஆகம விதிகளை பின்பற்றி கட்டுகிறார்களோ? அதே போல் தான் நாம் வாழக்கூடிய வீட்டையும் வாஸ்து சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்ட வேண்டும். எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கட்டுவதன் மூலமே அந்த வீடு சிறப்பான வீடாக அமையும். அந்த வீட்டில் வசிக்கக்கூடிய நபர்களும் நல்ல முன்னேற்றமான வாழ்க்கையை வாழ முடியும். ஒருவேளை அந்த வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் என்பது ஏற்படும்.

- Advertisement -

வீட்டை கட்டி முடித்த பிறகு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்கும் பொழுது அவர் இந்த இடத்தில் இது இருக்கக்கூடாது அது இருக்கக் கூடாது வீட்டை மாற்றி கட்டுங்கள் என்று அதிக அளவில் பண விரயத்தை ஏற்படுத்துவார்கள். சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் அதை நாம் கஷ்டப்பட்டு செய்து விடலாம். வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நாம் நினைப்பது போல் நம்மால் வீட்டை மாற்றி அமைக்க முடியாது. சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் வாஸ்து ரீதியான தோஷங்கள் முற்றிலும் நீங்குவதற்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு மண் இருந்தால் போதும்.

இந்த தாந்த்ரீக பரிகாரத்தை வாஸ்து நாள் வரக்கூடிய நாளில் வாஸ்து நேரத்தில் செய்ய வேண்டும். ஒருவேளை வாஸ்து நேரத்தில் உங்களால் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் வாஸ்து நாளில் மதியம் 12 மணிக்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு மண் இருந்தால் போதும் என்று ஏற்கனவே கூறினோம் அல்லவா? அந்த மண் தான் குதிரையின் காலடி மண்.

- Advertisement -

எந்த குதிரையாக இருந்தாலும் குதிரை இருக்கக்கூடிய இடத்தில் குதிரையின் காலடி பட்ட மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். சரியாக வாஸ்து நேரத்திலோ அல்லது வாஸ்து நாளில் மதிய 12 மணிக்கு குதிரையின் காலடி மண்ணை நிலை வாசலுக்கு வெளியே தூவி விட வேண்டும். வேறு எதுவுமே செய்ய வேண்டாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் முற்றிலும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:ஜூன் மாதம் சிறப்பான மாதமாக அமைய

வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு அதிகப்படியாக பண விரயத்தை செய்யாமல் இப்படி எளிமையான முறையில் ஒரு கைப்பிடி அளவு மண்ணை வைத்து சரி செய்து விடலாம். முழு மனதுடன் செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்