நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சரி, அல்லது சொந்த வீட்டில் குடியிருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தால் குடும்பத்தில் பிரச்சனை என்ற சங்கடங்கள் உங்களுக்கு இருந்தால், அந்த வாஸ்து தோஷத்தை சரி செய்ய முடியாத பட்சத்தில் இந்த பிள்ளையாரை கொண்டு வந்து வாஸ்து தோஷம் உள்ள திசையில் வைத்து விடுங்கள் போதும். வீட்டில் இருக்கக் கூடிய வாஸ்து தோஷத்தால் பெரிய அளவில் உங்கள் குடும்பத்திற்கு, குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
வாஸ்து தோஷத்தை நீக்கும் பிள்ளையார்
வீட்டில் எந்த திசையில் வாஸ்து தோஷம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் எந்த இடத்தை மாற்ற வேண்டும் என்று வாஸ்து நிபுணர் சொல்லி இருக்கிறார். அந்த இடம் உங்களுக்கு தெரியும் அல்லவா. அந்த இடத்தை பரிகாரத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாழை இலையிலோ அல்லது வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
மஞ்சள் தூள் சிறிதளவு, பன்னீர் விட்டு கலந்து, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதன் தலையில் கொஞ்சம் அருகம்புல் வைத்து, வாஸ்து தோஷம் உள்ள திசையில் இந்த பிள்ளையாரை வைக்க, அந்த வாஸ்து தோஷத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
பிள்ளையாரை எந்த திசை நோக்கியும் வைக்கலாம். எந்த மூலையிலும் பிள்ளையாரை வைக்கலாம். பிள்ளையாருக்கு எந்த தோஷமும் கிடையாது. வாரத்தில் ஒரு முறை இந்த பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். அடுத்த வாரம் அதே கிழமையில் பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு, மீண்டும் புது பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் பெருமாள் மந்திரம்
தினமும் இந்த பிள்ளையார் முன்பு ஒரே ஒரு ஊதுவத்தி மட்டும் ஏற்றி வைத்திருங்கள் போதும். பிறகு வாஸ்து தோஷத்தால் உங்களுடைய வீட்டில் எந்த தோஷமும் இருக்காது. பிள்ளையார் உங்களை பத்திரமாக பாதுகாப்பார். “பிள்ளையாரே துணை, பிள்ளையாரே துணை, பிள்ளையாரே துணை” என்ற மூன்று முறை சொல்லுங்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தோஷங்கள் துன்பங்கள் வந்தாலும் உங்களுக்கு துணையாக பிள்ளையார் வந்து நிற்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.