வீட்டின் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் பூஜை முதல், கர்பிணி பெண்கள் எந்தெந்த கோவிலுக்கு செல்லலாம் என்பது வரை பயனுள்ள 6 ஆன்மீக குறிப்புகள் இதோ.

vasthu
- Advertisement -

நவீனமயமாதல் காரணமாக மக்களுக்கு நன்மை தரக்கூடிய நம் நாட்டின் பாரம்பரிய பல விடயங்களை நாம் இழந்திருக்கிறோம். இதற்க்கு ஆன்மீகம் ஒன்றும் விதிவிலக்கல்ல. நமக்கு எல்லா விடயங்களிலும் தங்களின் அனுபவ அறிவுரையை வழங்கிய நமது முன்னோர்கள், நமது உடல், மனம், ஆன்மாவுக்கு மிகப்பெரும் ஆற்றலைத் தருகின்ற ஆன்மீக விடயங்களிலும், தங்களின் அனுபவங்களை பாடங்களாக எதிர்கால சந்ததியினருக்கு கூறிச் சென்றுள்ளனர். அத்தகைய ஆன்மீக அனுபவ விதிமுறைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு 1:
பலரது வீட்டிலும் கிருஷ்ணர் படத்தை பூஜை அறையிலோ அல்லது வீட்டின் சுவற்றிலோ மாட்டி வைத்து வழிபாடு செய்வதை நாம் கண்டிருப்போம். அப்படி கிருஷ்ணர் படத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புபவர்கள் கிருஷ்ண பரமாத்மா ராதையுடனோ அல்லது பசுக்களை மேய்த்தவாறு புல்லாங்குழல் இசைத்து கொண்டிருக்கும் கிருஷ்ணர் படத்தை மட்டுமே வீட்டில் வைத்து வழிபாடு செய்யவேண்டும். கிருஷ்ண பரமாத்மா தனித்து புல்லாங்குழல் வாசிக்கும் வகையில் படம் இருந்தால் அவற்றை வீட்டிற்குள் வைக்கக்கூடாது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.

- Advertisement -

குறிப்பு 2:
குலதெய்வத்தின் ஆசி இல்லாமல் எந்த ஒரு நற்காரியமும் ஒரு வம்சத்தில் ஏற்படாது. அந்த வகையில் குலதெய்வத்தின் அருள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றியமையாததாகும். உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எல்லா வகையான நன்மைகளும் ஏற்பட, உங்கள் குலதெய்வத்தின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது சாலச்சிறந்தது. நீங்கள் வீட்டில் வைக்கும் அந்த குலதெய்வத்தின் படமானது சிறிய அளவில் இருந்தாலும் தவறொன்றுமில்லை.

kubera

குறிப்பு 3:
தங்கள் வீட்டில் செல்வ வளங்களை அள்ளித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் வெங்கடாசலபதி, லட்சுமிதேவி, குபேரன் போன்ற தெய்வங்களின் படங்களை சிலர் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் சுவற்றில் மாட்டி வைத்தோ வழிபடுகின்றனர். அப்படி அந்த தெய்வங்களின் படங்களை தங்கள் வீட்டில் மாட்டி வைக்க விரும்புபவர்கள் எக்காரணம் கொண்டும் அந்த தெய்வங்களின் படங்கள் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்தவாரோ அல்லது வீட்டுக்கு வெளிப்புறத்திலோ மாட்டி வைக்கக்கூடாது.

- Advertisement -

குறிப்பு 4:
தற்காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றியே தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கின்றனர். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வாஸ்து சாஸ்திர முறையில் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ள முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டின் எத்தகைய வாஸ்து தோஷங்களும் அவர்களை பாதிக்காமல் இருக்க “சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகன்” ஆகிய தெய்வங்கள் ஒன்றாக இருக்கும் வகையிலான ஒரு படத்தை தங்கள் வீட்டில் கிழக்கு திசையை பார்த்தவாறு மாட்டி வைத்து, தினமும் மலர் சாற்றி வழிபாடு செய்வதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து இருந்து அவர்களை காக்கும்.

vasthu

குறிப்பு 5:
வீட்டிற்கு முன்பாக தினந்தோறும் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களின் கைகளால் கோலமிடுவது அந்த வீட்டிற்குள் தெய்வீக சக்திகள் நுழைய வழி செய்யும். எனினும் எக்காரணம் கொண்டும் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை தினங்களில் வீட்டுக்கு முன்பாக கோலம் போடுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். அதைப் போன்றே தினந்தோறும் வீட்டிற்கு முன்பாக பெண்கள் கோலமிடும் பொழுது பித்ருக்களின் திசை என சொல்லப்படும் தெற்கு திசையை பார்த்தவாறு கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

Pregnancy symptoms

குறிப்பு 6:
உலகில் பெண்களுக்கு தாய் எனும் உன்னத பேறு, 10 மாதங்கள் தங்கள் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதால் கிடைக்கின்றது. ஒரு வம்சத்தின் அடுத்த தலைமுறையை தங்களின் வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிறக்கும் வரை எக்காரணம் கொண்டும் “காளி, அனுமன், பைரவர், முனீஸ்வரன், நரசிம்மர்” போன்ற தெய்வங்களின் கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதே நேரம் இந்த தெய்வங்களின் மந்திரங்கள், துதிகளை வீட்டிலிருந்தவாறே துதித்து அந்த தெய்வங்களை மனதிற்குள்ளாகவே வழிபடுவதால் தவறொன்றுமில்லை. இந்த தெய்வங்கள் ஒருவரின் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபடலாம்.

- Advertisement -