வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

4444
money
- விளம்பரம் -

எவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது. ஆகையால் அத்தகைய பொருட்களை வீட்டில் இருந்து நீக்குவது அவசியம். வாருங்கள் அந்த பொருட்கள் எவை என்று பார்ப்போம்.

puja room

நமது வீட்டு பூஜை அறையின் அமைப்பும் அதில் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமைப்பும் வாஸ்துப்படி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டின் பூஜை அறையில் தெய்வ படங்களை எதிர் எதிரே வைக்க கூடாது. அப்படி வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் சுவாமியின் படங்கள் கிழிந்திருந்தாலோ அல்லது சுவாமியின் சிலைகள் உடைந்திருந்தாலோ அதை வீட்டில் வைக்க கூடாது.

- Advertisement -

நாம் முகம் பார்க்கும் கண்ணாடிக்கும் வாஸ்துவிற்கும் நிறைய சம்மந்தம் உண்டும். உடைந்த கண்ணாடிகளை எப்போதும் வீட்டில் வைத்திருக்க கூடாது. இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் வருவதோடு செல்வதை சேர விடாமல் தடுக்கும். வீட்டில் தவறுதலாக கண்ணாடியை உடைந்துவிட்டால் உடனே அதை அப்புறப்படுத்திவிட்டு கோயிலிற்கு சென்று வருவது நல்லது.

mirror

வீட்டில் இருக்கும் குழாயில் எப்போதும் நீர் சொட்டமால் பார்த்துக்கொள்ளவேண்டும். நீர் எப்படி சொட்டுகிறதோ அதே போல நமது வீட்டில் இருக்கும் பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டே போகும்.

tap

வீட்டில் பழுதடைந்த எந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் வைத்திருப்பது சிறந்ததாகாது. அவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதேபோல உடைந்த கடிகாரத்திற்கும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆகையால் இது போன்ற போட்ருட்களை வீட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.

Advertisement