செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்

lord ganesh

புதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள் உள்ளன. அதனை செய்வதால் அந்த வீட்டில் நிறைய நற்பலன்கள் சேரும்.

மணிப்ளாண்ட்

money plant

மணி ப்ளாண்ட் என்னும் செடியை வீட்டின் வட-கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

கடிகாரம்:
கடிகாரம் என்பது அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள். அதனை சரியான இடத்தில் மாட்டுவதால் நற்பலன்கள் வந்து சேரும்.

wall clock

- Advertisement -

எங்கு மாட்டகூடாது?
கதவின் மேல் மாட்டகூடாது.
தெற்கு பகுதி சுவற்றிலும் மாட்டகூடாது.

எங்கு மாட்டலாம்?
கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு திசையில் மாட்டுவது சிறந்தது

கண்ணாடி:

mirrorநாம் தினம் தினம் முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கு வைக்கிறோமோ அதற்கேற்றாற் போல் தான் நல்லவையும் தீயவையும் பிரதிபலிக்கும்.
செவ்வகமோ அல்லது சதுர வடிவிலோ கண்ணாடி இருப்பது சிறந்தது. அதோடு வட-கிழக்கு திசையில் 4-5 அடி உயரத்தில் கண்ணாடியை மாட்டுவது சிறந்தது.

7 குதிரைகள் கொண்டஓவியம்

7 horse
7 குதிரைகள் கொண்ட ஓவியத்தை நாம் வீட்டில் வைப்பது வழக்கம். அனால் இதை அணைத்து அறைகளிலும் வைத்துவிட முடியாது.

வைக்க வேண்டிய அறைகள்:
ஹால்,படுக்கையறை போன்றவற்றில் இந்த ஓவியத்தை மாட்டி வைத்தால் செல்வம் சேரும்.

வைக்க கூடாத இடங்கள்:
நுழைவு வாசல், சமையலறை, குளியலறை.

இதையும் படிக்கலாமே:
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்

English Overview:
Here we have some Vasthu tips to increase money flow in home.