உங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்

vastu

நாம் இந்த உலகில் பிறந்த முதல் இறப்பு வரை பஞ்சபூதங்களின் ஆளுகைக்கு உட்பட்டு வாழ்கிறோம். இந்த பஞ்ச பூதங்களின் சக்தி பூமி எங்கிலும் நிறைந்திருக்கிறது. நாம் வாழ்வின் பெரும்பாலான காலத்தை கழிக்கும் ம் இடமான நமது இல்லத்தில் இவற்றின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கிறது. இந்த பஞ்ச பூதங்களின் ஆற்றல்களை நமக்கு நன்மை ஏற்படுமாறு உபயோகித்து கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுமான கலைதான் வாஸ்து சாஸ்திர கலையாகும். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விதி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது வீட்டில் வளமை என்றும் நீடித்திருக்கும். அந்த முக்கியமான சில வாஸ்து குறிப்புகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் புது வீடு கட்டும் போது உங்கள் வீட்டு மனையின் வடகிழக்கு பகுதியில் கிணறு தோண்டி, அந்த கிணற்றில் நீர் சுரக்கும் பட்சத்தில், அந்த நீரைக் உங்கள் புதிய வீட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டங்கள் ஏற்பட வழிவகை செய்யும். அதே நேரத்தில் உங்க வீட்டு மனையின் தென்கிழக்கு பகுதியில் கிணறு தோன்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் புதிய வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது, அந்த வீடு அல்லது வீட்டு மனையின் வாயில் தென்மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. தென்மேற்கு திசை என்பது துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழைய வழி வகை செய்யும் திசையாக இருக்கிறது. எனவே தென் மேற்கு திசையை பார்த்தவாறு வீட்டின் பிரதான வாயில் கதவை கொண்டவர்கள், வீட்டு வாயில் வெளிப்புற சுவற்றின் இரண்டு பக்கங்களிலும், கதாயுதத்தை தாங்கியிருக்கும் அனுமனின் டைல்களை பதித்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

hanuman

மனையின் தென்கிழக்கு பகுதியில் வீட்டின் சமையலறை அமைப்பது மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் வீட்டின் பிரதான வாயிற் கதவுக்கு நேராக வீட்டின் சமையலறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிவறை போன்றவை வீட்டு மனைக்கு வெளிப்புறமாக கட்டுவதே சிறந்தது. ஆனால் தற்காலங்களில் ஏற்படுகின்ற இடநெருக்கடி காரணமாக வீட்டிற்குள்ளாகவே குளியலறை,கழிவறை கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் வீட்டின் வடமேற்கு பகுதியில் குளியலறை, கழிவறை போன்றவற்றை அமைப்பதே சிறந்தது. எக்காரணம் கொண்டும் குளியலறை, கழிவறை, பூஜை அறை, போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக அல்லது அக்கம் பக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

- Advertisement -

வீட்டிற்கு வெளிப்புறமாக தோட்டப் பகுதியில் பால் வகை மற்றும் முட்கள் இருக்கும் செடி, மர வகைகளை வளர்க்கக் கூடாது. மரங்கள் வீட்டை விட உயரமாக வளர்வதால் என்ற வாஸ்து குறையும் ஏற்படாது. எனினும் வீட்டின் பிரதான வாயிலில் சூரியவெளிச்சம் படுவதை தடுக்கும் வகையில் மரங்களின் உயரம் அடர்த்தி போன்றவை இருக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
புதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for good life in Tamil. It is also called as Athirstam peruga vastu in Tamil or Veedu kattum vastu in Tamil or Vaastu shastra in Tamil or Athirstam pera in Tamil.