நீங்கள் புதிதாக வீடு கட்டும் முன்பாக இவற்றை செய்யுங்கள்

vasthu

இல்லறம் என்கிற வார்த்தையே இல்லம் எனப்படும் வீட்டில் ஒரு குடும்பம் வசிப்பதை குறிப்பதாக இருக்கிறது. எனவே வீடு என்பது மனிதர்கள் அனைவரின் அடிப்படை உரிமை உலகின் சில நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. நமது நாட்டிலும் பெரும்பாலான மக்கள் தாங்கள் சேர்த்த செல்வம் மூலம் தங்களுக்கென ஒரு காலி மனை வாங்கி சொந்த வீடு கட்டி குடியேற விரும்புகின்றனர். அப்படி சொந்த வீடு கட்ட மனை வாங்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து விதிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் புதிதாக வீடு கட்ட வாங்கியிருக்கும் மனை மேடு, பள்ளங்கள் அதிகமில்லாமல் சமதளமாக இருப்பது நல்லது. இந்த மனை நிலத்திலோ அல்லது அந்த மனை நிலத்தை தோண்டும் போது நாய், மனித எலும்புகள் கிடைத்தால் அந்த மனையில் வீடு கட்டாமல் முடிந்த வரை விற்று விடுவது நல்லது. அதே நேரத்தில் பசு மாடு, யானை போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்தால் அத்தகைய வீட்டு மனைக்கு தோஷம் ஏதுமில்லை.

நீங்கள் வாங்கவிருக்கும் வீட்டு மனை கோயிலுக்கு சொந்தமான மனையாகவோ அல்லது கோயில் சந்நிதி மையத்திற்கு நேரெதிராக இருக்கும் மனையாகவோ இருக்க கூடாது. சுடுகாடு அருகில் இருக்கும் மனை, விபத்து, கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகள் நடந்த மனைகளை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. கால்வாய், ஆறுகள், நதி போன்றவற்றிற்கு மிக அருகில் இருக்கும் மனைகளை அது பாதுகாப்பானதாக இருந்தாலும் வாங்க கூடாது.

வீட்டு மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மலைகள் வருமேயானால் அந்த மனைகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும். மேலும் மனையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முக்கூட்டு சாலை, கோயிலுக்கு சொந்தமான நந்தவன பகுதிகளை ஒட்டிய மனைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கோயில் கோபுரத்தின் நிழல் விழுகின்ற மனைகளை வாங்குவதையோ அல்லது அங்கு வீடு கட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கடைகளுக்கான வாஸ்து விதிகள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veetu manai in Tamil. It is also called as Veetu manai vastu in Tamil or Vastu kurippugal in Tamil or Vastu vidhi in Tamil or Veedu manai vastu in Tamil.