உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்

vastu-for-job

மனிதன் என்பவன் உழைப்பதற்காகவே பிறந்தவன் என சில தத்துவ ஞானிகள் புகழ்ந்துள்ளனர். வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்லாமல் நமது உடல் மற்றும் மனதிற்கு உற்சாகம் தரும் ஒரு செயலாகவும் இருக்கிறது. ஆனால் இக்காலங்களில் வேலை கிடைப்பது என்பதே மிகப் பெரும் சவாலாக உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வீடுகளில் கடைப்பிடிக்க கூறப்பட்டிருக்கும் வாஸ்து விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

vastu

வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவைப்படுகிறது அந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வாஸ்துவின் படி செல்வத்தை தரும் திசையாக வடக்கு திசை இருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் வடக்கு திசை சுவற்றை ஆராயும் போதே உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வடக்குப் பக்கத்தில் இருக்கும் சுவர்களில் தேவையில்லாத அலங்காரங்கள் மற்றும் வடக்கு திசை சுவற்றை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் உபயோகமில்லாத பொருட்கள் போன்றவற்றை நீக்கி விட்டு அந்த திசை சுவற்றை காலியாக வைக்க வேண்டும். இப்படி செய்தாலே உங்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தனவரவுகளில் இருந்த தடங்கல்கள் நீங்கி நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

Govt job

வீட்டின் எந்த ஒரு அறையிலும் வடக்குப் பக்கத்தில் இருக்கும் சுவற்றின் ஓரமாக தெற்கு திசையைப் பார்த்தவாறு அலமாரிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்றே இரும்பு அல்லது மர அலமாரிகளை வடக்கு பக்க சுவற்றோரம் வைப்பதால், வடக்கு திசையில் இருந்து வரும் நேர்மறையான ஆற்றல்களை அப்பொருட்கள் கிரகித்துக் கொண்டு, உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பணமுடை, வேலை வாய்ப்பு கிடைப்பதில் தடங்கல், தாமதம் போன்ற எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

interview

வீட்டில் வடக்கு திசையில் இருக்கும் சுவற்றை அலங்கரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடியை வடக்கு திசை சுவற்றில் மாட்டி வைப்பதால் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான முயற்சிகள், நேர்முக தேர்வுகளில் வெற்றிகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் ஏற்பட்டு வந்த தொடர் தடைகள், தாமதங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வாஸ்து

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for job in Tamil. It is also called as Vasthu sasthram in Tamil or Vastu vidhi in Tamil or Velai kidaika vastu in Tamil or Velai vaippu vastu in Tamil.