உங்களுக்கு கடன் பிரச்சனை ஏற்படாமல் செய்யும் வாஸ்து முறை பற்றி தெரியுமா?

panam
- Advertisement -

முற்காலத்தில் நம்மிடம் அதிகம் இருக்கும் பொருளை கொடுத்து, நமக்கு தேவையான பொருளை வாங்கிக்கொள்ளும் பண்டமாற்று முறை இருந்த போது மக்கள் அனைவரும் நிறைவோடு வாழ்ந்தனர். பணம் என்கிற ஒன்று வந்த பிறகு, கூடவே கடன் என்கிற ஒன்றும் வந்து விட்டது. இக்காலத்தில் கடன் இல்லாத நபர்கள் அனேகமாக இல்லை என்றே கூறலாம். வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வசிப்பவருக்கு கடன் ஏற்படாமல் செய்யும் வாஸ்து விதிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வாழ்வில் எதிர்பாராத சூழ்நிலைகளில் பொருளாதார பற்றாகுறை ஏற்படும் காலத்தில் கடன் வாங்க நேரிடுகிறது. கடன் என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அதை வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்துவது பலருக்கு மிக கடினமான ஒரு விடயமாக இருக்கிறது. ஒருவர் வசிக்கும் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளும் கடன் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது. வீட்டில் பணம் தங்கவும், கடன் ஏற்படாமல் இருக்கவும் கீழ்கண்ட வாஸ்து விதிகளை வீடு கட்டும் போது கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

நீங்கள் வீடு கட்டும் மனை சதுரம் அல்லது செவ்வகம் வடிவில் இருப்பது முதல் தரமான, பொருளாதார லாபங்களை தரும் மனை வகையை சேர்ந்ததாகும். புது வீடு கட்டும் போது வீட்டின் வடமேற்கு பகுதியில் கழிவறையும், தென்கிழக்கு பகுதியில் சமையலறையும், வடகிழக்கில் வரவேற்பு அறை, தென்மேற்கில் படுக்கையறை அமைக்க வேண்டும். தரைக்கு கீழாக செல்லும் தண்ணீர் அமைப்பு வடகிழக்கிலும், தரைக்கு மேலாக செல்லும் தண்ணீர் தொட்டி அமைப்பு தென்மேற்கு பகுதியிலும் அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

money

வீட்டை சுற்றி நான்கு புறமும் வெளிப்புற மதில் சுவர் எழுப்புவது சிறந்தது. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக காலி இடம் இருப்பது அவசியம். வீட்டின் செப்டிக் டாங்க் எனப்படும் கழிவு நீர் குழியை வடமேற்கு திசையில் அமைப்பது சிறந்தது. படிகள் அனைத்தும் வடகிழக்கு பகுதியை தவிர மற்ற மூன்று திசைகளிலும் வெளிப்புற படிகளாக அமைப்பது நல்லது. வீட்டின் பூஜையறை வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கட்டும் போது வடக்கு, கிழக்கு திசைகளை பார்த்தவாறு கட்டுவது நல்லது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வீட்டில் விலங்குகள் வளர்ப்பு வாஸ்து குறிப்பு

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadan theerkum vastu in Tamil. It is also called as Veetu vasthu in Tamil or Panam sera vastu in Tamil or Veedu vastu amaippu in Tamil or Kadan theera vastu in Tamil.

- Advertisement -