வாஸ்துவும் கணவன் மனைவி பிரிவிற்கு காரணமா?

husbandandwife-vastu

இந்த காலத்தில் தம்பதிகள் பிரிந்து வாழ்வது சகஜமான ஒன்றாகிவிட்டது. இதற்கு காரணம் பெண்கள் உரிமை அதிகரிக்கபட்டதா? இது நல்லதுக்கா? இல்லை கெட்டதுக்கா? என்று கேட்டால் திருதிருவென முழிக்க வேண்டியது தான். எந்த பதில் கூறினாலும் மாட்டிக்கொள்ள வேண்டியது தான். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி ஆனால் அதனால் பாதிக்கப்பட போவது என்னவோ அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தாய், தந்தையரின் ஒற்றுமையில் தான் பிள்ளையின் எதிர்கால நலன் அமைந்திருக்கும். ஒவ்வொரு பிள்ளையின் எதிர்காலத்தில் தான் இந்த சமுதாயத்தின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு பிரச்சினைக்கு எல்லாம் பிரிவு தான் ஒரே தீர்வு என்று எண்ணுவது முறையல்ல. முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இவ்வாறான கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் ஒரு வகையில் வாஸ்துவாக இருக்கக்கூடும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள் அவற்றைப் பற்றிய விரிவான அலசல் இதோ.

scolding-each-other

நன்றாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென பிரச்சனைகள் தலை தூக்குவது எதனால்? அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது எதனால்? இதற்கும் உங்களது வீட்டின் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டால், ‘ஆம்’ என்று கூறுகிறார்கள். கணவன் மனைவி உறவு என்பது அனைத்து உறவுகளை விடவும் அப்பாற்பட்ட ஒரு புனிதமான உறவாகும். அவர்களுக்குள் பிரிவுகளோ, பிரச்சனைகளோ ஏற்படுவது அவ்வளவு நல்லதல்ல. கணவன் மனைவி பிரிவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

பணி நிமித்தமாக வெளியூரில் தங்கி பணிபுரிதல் காரணமாக தம்பதியர்கள் இருவரும் பிரிந்து இருத்தல்.

job

அல்லது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு வருடம் ஒரு முறை தாய்நாடு திரும்பும் கணவன்மார்கள் போன்றவர்களால் தம்பதியர்கள் பிரிந்து இருத்தல்.

- Advertisement -

குழந்தை பெற்றுக்கொள்ள தாய்வீடு சென்ற மனைவியை கோபம் கொண்ட கணவன் அப்படியே விட்டுவிட்டு தனியாக வாழ்வதால் ஏற்படும் பிரிவு.

வேறு வேறு நாட்டில் தங்கி பணிபுரியும் தம்பதியர்கள் அப்படியே நிரந்தரமாக பிரிந்து விடுதல்.

இருவரில் ஒருவர் இறந்து விடுவதால் ஏற்படும் பிரிவு.

கணவன் மேல் உள்ள வெறுப்பினால் தன்னுடைய தாய் வீட்டிற்கு மனைவி சென்று விடுவதால் ஏற்படும் பிரிவு.

sad-couple

விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இருவரும் பிரிந்து இருத்தல்.

அல்லது விவாகரத்து செய்து கொண்டு நிரந்தரமாக பிரிந்து விடுதல்.

இவ்வாறான பல பிரிவுகள் கணவன்-மனைவிக்குள் ஏற்படுவதுண்டு. அதற்கான வாஸ்து காரணம் என்னவாக இருக்கும்? நமது வீட்டின் அமைப்பு சரியாக அமைக்கப்படாததால் ஏற்படும் பிரச்சினைகளா இவை? என்று பார்க்கலாம்.

பூஜையறை, சமையலறை மற்றும் கழிப்பறை இவை வீட்டின் தென்மேற்கு மூலையில் அமைந்திருப்பது நல்லதல்ல.

vastu

அப்படி என்றால் தென்மேற்கு மூலையில் என்ன வரவேண்டும்?
தென்மேற்கு மூலையில் படுக்கை அறை வரவேண்டும். அப்படி படுக்கை அறை இருந்தும் சிலர் அந்த அறையை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவது உண்டு. அதுவும் பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.

பிரதான வாசல், செப்டிக் டேங்க் மற்றும் கார் பார்க்கிங் போன்ற அமைப்புகள் தென்மேற்கு பகுதியில் அமைந்திருந்தால் அதுவும் கணவன் மனைவி பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

vastu

தென்மேற்கு மூலையில் இருந்து பார்த்தால் வெளியிலிருக்கும் பாதை தெரிவது சரியான அமைப்பு அல்ல.

மேற்கு பகுதியை மட்டும் காலியாக விட்டுவிட்டு மற்ற பகுதி முழுவதையும் ஆக்கிரமித்து வீடு கட்டுவது முறையல்ல. அதுவும் பிரச்சனை தான்.

மேற்கூறிய அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்று பாருங்கள். தகுந்த வாஸ்து நிபுணர்களை அணுகி உங்கள் வீட்டின் பிரச்சனைக்குரிய பகுதிகளை சரி செய்வதற்கு தீர்வு காணுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்? சித்தர்கள் கூறிய ரகசியம்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Southwest vastu in Tamil. Husband wife vastu tips. Husband wife fight vastu. Vastu for husband and wife.