ஆந்திரா ஸ்டைல் எள்ளு சட்னி செய்முறை

peanut chutney
- Advertisement -

பொதுவாக இட்லி தோசைக்கு சைடிஷ் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது சட்னி தான். ஏனெனில் செய்வதற்கு மிகவும் சுலபம் அதுமட்டுமின்றி இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான். இந்த சட்னியில் பலவகை உண்டு. அதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சட்னி பிடிக்கும்.

இத்தனை வகைகள் இருந்தும் சட்னி வகைகளில் நாம் அதிகமாக அரைப்பது என்னவோ பொட்டுக்கடலை அல்லது வேர்கடலை சட்னி, கார சட்னி இவைகள் தான். இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் எப்பொழுது அரைக்கும் வேர்கடலை சட்னியில் கொஞ்சம் எள்ளு சேர்த்து வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் ஒரு சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1/4 கப்,
வெள்ளை எள் -1 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் -1,
இஞ்சி – சிறிய துண்டு,
புளி – நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 6,
உப்பு -1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கருவேப்பிலை -1 கொத்து,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி – 1 கைப்பிடி பொடியாக நறுக்கியது

செய்முறை

இந்த சட்னி அரைக்க முதலில் அடுப்பில் பேன் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் வேர்க்கடலையை சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து விடுங்கள். இத்துடன் புளி காய்ந்த மிளகாய் உப்பு எள்ளு, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நிறம் மாறாமல் லேசாக வதக்கி எடுத்து தனியாக ஒரு தட்டில் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து உப்பு சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஃபைன் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நார்ச்சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி லட்டு செய்வது எப்படி

இப்பொழுது தாளிப்பை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றி கலந்து விட்டு இட்லியுடன் பரிமாறுங்கள். நல்ல கமகமவென்று வாசனையுடன் இருக்கும் இந்த சட்னிக்கு நீங்கள் எத்தனை இட்லி செய்தாலும் பத்தாது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த சட்னி நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -