இதுவரை பூக்காத, காய்க்காத செடிகள் கூட கொத்து கொத்தாக பூத்து காய்க்க தொடங்கி விடும். இந்த 1 பொருளை செடிக்கு உரமாக இப்படி போடுங்கள்.

- Advertisement -

நிறைய பேருக்கு இப்போது மாடித்தோட்டம் அமைப்பது, வீட்டிற்கு முன்பு இருக்கக்கூடிய இடத்தில் தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், சில பேர் வைக்கக்கூடிய செடிகொடிகள் சரியான முறையில் பராமரித்து வந்தாலும் நிறைய பூக்களை நிறைய காய்கறிகளை கொடுப்பது இல்லை. இதற்கு காரணம் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடாக கூட இருக்கலாம். மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச் சத்தை அதிகப்படுத்தி இயற்கையான முறையில் நம் வீட்டில் செடி கொடிகளை எப்படி செழிப்பாக வளர செய்வது என்பதை பற்றிய ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த உறத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் வாழைப் பூ. வாழைப்பூவை சமைப்பதற்காக சுத்தம் செய்வோம் அல்லவா. அந்த தொப்புள் பகுதியையும், மேலே இருக்கக்கூடிய குச்சி பகுதியையும் நீக்கிவிட்டு, அதேபோல சுத்தம் செய்து விட்டு சிறிதளவு வாழைப்பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த வாழை பூக்கும் மேலே சிவப்பு நிறத்தில் தோல் இருக்கும் அல்லவா. அதையும் ஒரு தோலை எடுத்து பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது வாழைப் பூ – 1 கைப்பிடி, வாழைப் பூவின் மேலே மூடியிருக்கும் சிவப்பு தோல் – 1 இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த விழுது அரைத்தவுடன் கொஞ்சம் கருப்பு நிறமாக தான் இருக்கும். இந்த விழுதை மோரில் கலக்கவேண்டும்.

புளித்த மோர் 1 லிட்டர் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மோரில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை ஊற்றி நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு 2 நாள் புளிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு இந்த 1 லிட்டர் உரத்தண்ணீரை, அப்படியே 3 லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கலந்து விடுங்கள். நமக்கு தேவையான உரம் தயாராகி விட்டது. இந்த உரத் தண்ணீரை எல்லா செடிகளுக்கும் 1/2 லிட்டர் அளவு கொடுத்தால் சரியாக இருக்கும்.

- Advertisement -

இந்த உரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை செடிகளுக்கு கொடுத்தால் கூட போதும். செடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்து நிறைவாக கிடைத்து செடி கொடிகள் நன்றாக செழிப்பாக வளர்ந்து பூக்க காய்க்க தொடங்கி விடும். ரோஜா பூ செடி, செம்பருத்தி பூ செடி, முல்லை, மல்லி ஜாதி மல்லி எல்லா வகையான பூ செடிகளுக்கும், காய்கறி, பழ செடிகளுக்கும் இந்த உரத்தை கொடுக்கலாம்.

இதோடு சேர்த்து உங்கள் வீட்டுச் செடி கொடிகளிடம் இரண்டு நிமிடங்கள் நேரத்தை செலவழித்து ஆசையாக பேசுங்கள். ஆசையாக பேசும்போது அந்த செடி கொடிகள் இன்னும் செழிப்பாக வளரும் என்று சொல்லுவார்கள். நீங்கள் பேசுவது நிச்சயம் உங்கள் வீட்டுச் செடி கொடிகளுக்கு கேட்கும். செழிப்பான செடி வளர்ச்சிக்கு மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டு தோட்டம் நிறைய நிறைய பூக்களையும் நிறைய நிறைய காய்களையும் சந்தோஷமாக கொடுத்துக்கொண்டே இருக்கும்.

- Advertisement -