வழக்குகளில் வெற்றி பெற முருகர் வழிபாடு

murugan court
- Advertisement -

பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரவேண்டும் என்பதற்காக பலரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த பிரச்சினைக்கான வழக்கை தொடுப்பார்கள். இது உடனே தீர்ந்து விட்டால் பரவாயில்லை. அப்படி தீரவில்லை என்றால் கோர்ட்டு கேஸ் என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த அலைச்சலில் எந்த அளவிற்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ பண நஷ்டமும், மன கஷ்டமும், உடல் வலியும்தான் அதிகமாக ஏற்படும். இந்த சூழ்நிலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் கோர்ட்டு கேஸ் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கும். அந்த தெய்வத்தை எந்த நாளில் நாம் வழிபடுகிறோம் என்பதற்கும் ஒரு பலன் இருக்கும். அதே சமயம் எந்த முறையில் வழிபடுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கும். ஒவ்வொரு பலனையும் நாம் அறிந்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்றவாறு அந்த வழிபாட்டை செய்வதன் மூலம் அந்த பலனை நம்மால் அடைய முடியும். அந்த வகையில் முருகப்பெருமானை எந்த நாளில் எப்படி வழிபட்டால் கோர்ட் கேசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும் என்று பார்ப்போம்.

- Advertisement -

முருகப் பெருமானின் இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு உகந்த நாளாக திகழ்வது சஷ்டி. வளர்பிறை சஷ்டியாக இருந்தாலும் பரவாயில்லை. தேய்பிறை சஷ்டியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சஷ்டியை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதே சஷ்டியில் தான் தொடர்ந்து நாம் இந்த வழிபாட்டு செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சஷ்டி என்பது முருகப்பெருமானுக்குரிய விரத நாட்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக குழந்தை பேரு இல்லாதவர்கள் சஷ்டி தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதையும் தவிர்த்து நாம் என்ன வரம் வேண்டுகிறோமோ அந்த வரத்தை வாரி வழங்கும் ஆற்றல் மிகுந்த ஒரு விரதமுறையாக தான் சஷ்டி விரதம் திகழ்கிறது.

இந்த சஷ்டி தினத்தன்று விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அந்த பச்சரிசியின் மேல் நம்முடைய விரலால் நட்சத்திரம் கோலத்தை போட வேண்டும். அந்த நட்சத்திரத்திற்கு நடுவில் வலம்புரி சங்கை வைக்க வேண்டும். வலம்புரி சங்கை வைப்பதற்கு முன்பாக சுத்தமான தண்ணீரையும் பன்னீரையும் பயன்படுத்தி வலம்புரி சங்கை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வலம்புரி சங்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு இதை நட்சத்திரத்திற்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சாத பசும்பாலை எடுத்து அந்த சங்கிற்குள் ஊற்ற வேண்டும். இந்த தாம்பாளத்தை முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து விட வேண்டும். அருகிலேயே முருகப்பெருமானுக்கு என்று ஒரு அகலில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு இந்த வலம்புரி சங்கிற்கும் முருகப்பெருமானுக்கும் செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

செவ்வரளி மலர்கள் கிடைக்காத பட்சத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய எந்த மலராக இருந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பிறகு கோர்ட் கேசு வழக்குகள் விரைவில் முடிய வேண்டும் என்ற வேண்டுதலை மனதார முருகப்பெருமானிடம் கோரிக்கையாக வைக்க வேண்டும். பிறகு தீப தூப ஆராதனை காட்டிவிட வேண்டும்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு மேல் முருகப் பெருமானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து நம்மால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தையும் வைத்து வழிபட வேண்டும். பிறகு சங்கில் ஊற்றி வைத்த பாலை கால்படாத இடத்திலோ அல்லது செடிகளிலோ ஊற்றி விட வேண்டும்.இந்த முறையில் தொடர்ந்து 5 சஷ்டிகள் நாம் செய்து வர கோர்ட் கேசு தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளிலும் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க வசம்பு தீபம்

நியாயமான நமக்கு சாதகமாக கிடைக்க வேண்டிய வழக்குகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த வழிபாடு நமக்கு பயன் தரும். பாதகமான வழக்குகளில் வெற்றிகள் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானை முழு நம்பிக்கையுடன் யாரையும் ஏமாற்றாமல் நமக்கு வேண்டிய தீர்ப்பு வேண்டும் என்று வேண்ட கண்டிப்பான முறையில் முருகனின் அருளால் வழக்குகள் சாதகமாக முடியும்.

- Advertisement -