உங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் போதே, நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறீர்களா?

நம்முடைய வாழ்க்கையின், முதல் தத்துவம் என்ன? நம்மிடம் இல்லாத ஒன்றை தேடுவதான்! இரண்டாவது நம்மிடம் இருக்கும் நல்லதை நாமே இழந்துவிட்டு, இழந்து விட்டோமே என்ற துயரத்தில், மீண்டும் அதை தேட தொடங்குவோம். எடுத்துக்காட்டாக, புரியும்படி சொல்லப்போனால், எந்த ஒரு உறவின் அருமையையும் இருக்கும் போது தெரியாது. இறந்த பின், அல்லது பிரிந்தபின் தான் உணர்வோம். பணத்தின் அருமை அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கும்போது தெரியாது. அது நம் கையில் இல்லாத போது தான் உணர்வோம். மகிழ்ச்சியின் அருமை துயரத்தில் தள்ளப்படும் போது தான் நமக்குத் தெரியும். மகிழ்ச்சி இருக்கும்போதே அதை அனுபவிக்க வேண்டும் என்று நாம் நினைப்பதே இல்லை.

money

இவ்வாறாக நம்மில் பல பேர் நம்மிடம் இருப்பதை இழந்துவிட்டு, பலவிதமான தேடல்களிலேயே வாழ்க்கையை தொலைத்து வருகிறோம் என்று தான் கூற வேண்டும். சரி. உங்களுக்கு, உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான, சரியான சூழ்நிலை அமைந்திருந்தது. அந்த சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தெந்த தெளிவான சிந்தனை உங்களுக்குள் வரவேண்டும். ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை இதே பாதையில் சென்று விடப்போவதில்லை. உங்களது வாழ்க்கை பாதை எப்படி மாறினாலும் அதை வாழ தேவையான மன திடம், மன தைரியம் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இளைஞர்களாக இருந்தாலும் கூட இவைகளை பின்பற்றினால் உங்களுடைய வாழ்க்கை சீராகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலாவதாக, சொல்லப்படுவது சரியான நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் என்றால் நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமே நன்மைக்குத்தான், என்று கண்மூடித்தனமாக எதையும் நம்பி விடக்கூடாது. இந்த செயலை நாம் செய்வதன் மூலம், என்ன நடக்கும்? இந்த செயல்பாட்டின் மூலம் அதிகப்படியான நன்மைகள் இருந்தாலும் அதில் எவ்வளவு நன்மை நம்மைச் சேரும், அந்தச் செயல்பாட்டின் மூலம் எவ்வளவு தீமை நம்மை வந்து சேரும் என்ற பகுத்தறிய வேண்டிய ஆற்றல் உங்களுக்கு இருக்க வேண்டும். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருக்க, கண்மூடித்தனமாக நம்பி எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டு பிரச்சனைகளை பெரிதாக்கி கொள்ளக்கூடாது.

books

உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தான் முடிவெடுத்து பழகவேண்டும். முடிவெடுப்பதை தள்ளிப்போடவும் கூடாது. உங்களுடைய பிரச்சனைக்கு முடிவு எடுக்கும் உரிமையை அடுத்தவர்களுடைய கையிலும் கொடுக்கவும்கூடாது. உங்களுடைய பிரச்சனைக்கு நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இளைஞர்களாக இருந்தாலும் கூட, உங்களுக்கு முடிவினை சரியாக எடுக்கத் தெரியவில்லை என்றாலும்கூட பரவாயில்லை! சில சமயத்தில் தவறான முடிவுகள் கூட, சரியான பாடத்தைக் கற்றுத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய அனுபவம் உங்களை இன்னும் தெளிவுபடுத்தும்.

- Advertisement -

உங்களுடைய மனதை எப்போதும் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மன தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள, என்ன புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் வாசித்து பழகுங்கள். திடீரென்று உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு விட்டால், அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு கட்டாயம் தேவை அதற்கான பயிற்சியை இப்போதிலிருந்தே தொடங்குவது நல்லது.

hundi

அடுத்தவர்களுடைய வாழ்க்கையை, நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துப் பழக வேண்டும். அதாவது நன்றாக வாழ்ந்தவர்கள் என்று சொல்வார்கள் அல்லவா? அவர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையை எப்படி அணுகுவது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. வாழ்க்கை என்றால் இதுதான் என்ற சில தத்துவங்கள் உள்ளது. அந்த தத்துவங்களையும் முடிந்தவரை கற்று வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

நீங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இளைஞர்களாக இருந்தாலும், வாழ்க்கையைத் தொடங்கியவர்களாக இருந்தாலும், வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை பணம். இதை நீங்கள் சரியான விதத்தில் கையாளக் கற்றுக் கொண்டால் கடன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். உங்கள் கைக்கு பணம் வரும் போதே அதை சேமிப்பதில் உங்களுடைய சாமர்த்தியத்தை காட்டுங்கள்!

இறுதியாக ஒன்று! எது செய்வதாக இருந்தாலும் அதை சந்தோஷமாகவும், இஷ்டப்பட்டும் செய்ய வேண்டும். காலத்தின் சூழ்நிலை காரணமாக நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு விருப்பமில்லாத தாக இருந்தாலும், அதன் மேல் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேறி விடலாம். மகிழ்ச்சி உங்களை தேடி வரும் என்பதை இறுதியாக சொல்லி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

English Overview:
Here we have Vazhkkai thathuvam in Tamil. Vazhkai thathuvam. Vazhkai thathuvam Tamil. Tamil thathuvam. Thathuvangal Tamil.