உங்கள் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக மாற்றக்கூடிய இந்த 5 விஷயங்களைக் கடைப்பிடித்துப் பார்த்தால் தான் என்ன?

thinking-exercise
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் சிறு சிறு மாறுதல்களை ஏற்படுத்தினால் ஒட்டு மொத்த வாழ்க்கையே மாறிவிடக் கூடிய அளவிற்கு பலன்கள் கிடைக்கும். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளைத் திருத்திக் கொள்வதால் மிகப்பெரிய பிரச்சனைகளை கூட நம்மால் எளிதாக சமாளித்து விட முடியும். நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய இந்த 5 விஷயங்களை நாம் கடைப்பிடித்து பார்த்தால் தான் என்ன? அப்படியான 5 சுவாரஸ்ய விஷயங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

poramai

1
நீங்கள் எப்பொழுதும் உங்களிடம் என்ன இருக்கிறது? என்பதை தான் கவனிக்க வேண்டும். அடுத்தவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள்? என்பதை பார்த்தால் நமக்கு பொறாமை தான் வரும். நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நிம்மதிக்கு கியாரண்டி உண்டு. அடுத்தவர்கள் செயலும், சிந்தனையும் நமக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிந்தனையும், செயலும் உண்டு. அதனை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தலாமே தவிர, மற்றவர்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது. பொறாமை என்பது நம்மைப் பிடித்திருக்கும் பேய் போன்றது. இது மற்றவர்கள் மீது வெறுப்பை வர வைத்துவிடும். எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தான் ஹீரோவாக இருக்க வேண்டும், அடுத்தவர்கள் அல்ல.

- Advertisement -

2
எப்பொழுதும் நாம் பேசுவதை விட கவனிப்பதை அதிகப்படுத்த வேண்டும். பெரும்பாலும் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் கவனிப்பது கிடையாது. அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டுமே என்பதால் மட்டுமே கவனிப்பார்கள் ஆனால் அவர்கள் என்ன கூற வருகிறார்கள்? அதிலிருக்கும் அர்த்தங்கள் என்ன? என்பதை யாரும் சரியாக கவனிப்பது கிடையாது. ஒருவர் பேசுவதை முழுமையாக நாம் கவனித்து விட்டு பின்னர் இறுதியாக அதற்குரிய சரியான பதிலை நாம் கொடுக்க வேண்டும். இடையிடையே பேசுவது அல்லது பேசுகின்ற டாப்பிக்கை மாற்றுவது வெற்றிக்கான செயல் அல்ல.

brainwaves moolai

3
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்பதை முதலில் கவனிக்க வேண்டும். இருக்கும் இடத்திலேயே திருப்தி அடைய வேண்டும். இருக்கும் இடத்திலிருந்து தான் நீங்கள் மகிழ்ச்சியாக எப்படி இருப்பது? என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். நான் இப்படி இருந்தால் தான் மகிழ்ச்சி என்பதை எப்பொழுதும் கற்பனையில் ஓட்டிப் பார்த்து கொண்டே இருக்கக் கூடாது. இந்த நிமிடம், இந்த நொடி தான் நிரந்தரம்! எனவே இந்த நிமிடம் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக உங்களை வைத்துக் கொள்ள முடியும்? என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் மகிழ்ச்சி என்கிற எண்ண ஓட்டத்தை நிறுத்திவிட்டு, இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம்? என்பதை நீங்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே மகிழ்ச்சி உங்களை தேடி தானாக வரும்.

- Advertisement -

4
உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியம். ஒருவரிடம் உங்களுடைய எதிர்மறை விஷயங்களை சொல்கிறீர்கள் என்றால் அவர்கள் உங்களை நேர்மறையாக நினைக்க முடியாது அல்லவா? நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும். நேர்மறையான உங்களுடைய குணங்களை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் பொழுது தான் நீங்கள் மேலும் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்? என்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் நினைப்பதை விட நீங்கள் புத்திசாலி என்றும், நீங்கள் அழகானவர்கள் என்று ஆணித்தரமாக நம்ப வேண்டும்.

Jogging

5
தினமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய பழகிக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் உங்களுடைய நேரத்தை வீணாக செலவிடுவதற்கு பதிலாக உங்களை நீங்கள் மேலும் மெருகேற்றிக் கொள்ளவும், உங்களை இன்னும் நீங்கள் நேசிக்கவும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி மேற்கொள்வதால் நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சி வெளியில் வரும் என்கிறது அறிவியல். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கவும், வெற்றியை நோக்கிப் பயணிக்கவும் நிச்சயம் உடற்பயிற்சியை தினமும் செய்து வருவது சிறப்பான பலனை கொடுக்கும். உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நன்மை இதை விட சிறந்ததாக இருந்து விட முடியாது. உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், உங்களைப் பற்றி சிந்தியுங்கள், உங்களை நீங்கள் பெரிதாக நினையுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உங்களை தேடுங்கள்.

- Advertisement -