- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇளம் வயதில் ஏற்படக்கூடிய வழுக்கை நீங்க இந்த தண்ணியை பயன்படுத்திப் பாருங்கள்.

இளம் வயதில் ஏற்படக்கூடிய வழுக்கை நீங்க இந்த தண்ணியை பயன்படுத்திப் பாருங்கள்.

- Advertisement -

அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதிலும் சிலருக்கு இந்த முடி உதிர்வானது வழுக்கை என்ற பெயரில் மாறிவிடும். வயதான பிறகு வழுக்கை ஏற்பட்டாலே கவலைப்படுபவர்கள் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனை என்பது ஆரம்பித்து விடுகிறது. மேலும் ஆண்களுக்கு மட்டும் இந்த வழுக்கை ஏற்படாமல் பெண்களுக்கும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

மருத்துவ ரீதியாக வழுக்கைக்கு பல காரணங்களை கூறுகிறார்கள். பல பெயர்களை வைக்கிறார்கள். இளம் வயதில் ஏற்படக்கூடிய வழுக்கை பிரச்சினை தீருவதற்காக பல மருந்துகளையும் உபயோகப்படுத்துகிறார்கள். அந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் என்பது அதிகமாகவே ஏற்படுகிறது. இப்படி மருத்துவம் ரீதியாக முயற்சிகளை மேற்கொள்ளாமல் முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு செய்யக்கூடிய வழிமுறைகளை தெரிந்து கொண்டால் முடி உதிர்தல் பிரச்சனையையும், வழுக்கை பிரச்சினையையும் சரி செய்து விட முடியும்.

- Advertisement -

முதலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகம் என்பது நம் தலையில் இருக்கக்கூடிய இறந்த செல்களை எளிதில் நீக்கி புது செல்களை உருவாக்க உதவுகிறது. அதனால் வழுக்கை இடங்களில் புதிய முடி வளர ஆரம்பிக்கும். இரண்டாவதாக இதனுடன் நாம் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், வெந்தயம் உடல் குளிர்ச்சியை தருவதோடு பொடுகு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

இப்பொழுது இந்த இரண்டு பொருட்களையும் இடி கல்லை பயன்படுத்தி இடித்துக் கொள்ள வேண்டும். நைசான பவுடராக இடிக்காமல் ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் நாம் இடித்து வைத்திருக்கும் இந்த பொடியை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை நன்றாக தோல் சீவி சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு செம்பருத்தி பூ பொடியை சேர்க்க வேண்டும். செம்பருத்திப்பூ கிடைக்கும் பட்சத்தில் இரண்டு செம்பருத்திப் பூக்களை மகரந்தத்தை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக கொதித்து ஒரு டம்ளர் வரும் அளவிற்கு அடுப்பிலேயே குறைந்த தீயில் வைத்துவிட வேண்டும். ஒரு டம்ளர் வந்த பிறகு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதை தினமும் காலையிலும் மாலையிலும் தலையின் வேர்க்கால்களில் நன்றாக படுமளவிற்கு ஸ்பிரே செய்துவிட்டு மசாஜ் செய்து விட வேண்டும். வழுக்கை விழுந்த இடங்களில் கொஞ்சம் அதிகமாகவே ஸ்பிரே செய்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து விட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சிறிது நேரத்தில் தலையும் காய்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா தெரிஞ்சா ஆயிசுக்கும் உங்களுக்கு குதிகால் வெடிப்பு வரவே வராது.

இயற்கையாகவே நமக்கு கிடைக்கக்கூடிய நம் தலைமுடியை செழிப்பாக வளர வைக்கக்கூடிய இந்த அற்புதமான பொருட்களை நாம் உபயோகப்படுத்தி நம் தலை முடி பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்து பிறரின் கிண்டல் கேலிக்கு ஆளாகாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

சற்று முன்