- Advertisement -

வீடு கட்ட 6 மணி வழிபாடு

- Advertisement -

நவகிரகங்களுக்கும் கட்டளையிடும் அதிகாரத்தில் இருப்பவள் அம்பாள். வேறு யாராலும் நவகிரகங்களை ஆட்டுவிக்க முடியாது. சிவனில் சரிபாதி அம்பாளாக இருப்பதால், இந்த பிரபஞ்சத்தையே வழிநடத்தி கொண்டிருக்கிறாள். காலையில் ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான இந்த காலத்தை புண்ணிய காலம் என்பார்கள். இந்த நேரத்தில் எப்படி வழிபட்டால் வீடு கட்டும் பாக்கியத்தை நாம் பெறலாம்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

காலை 6:00 மணி முதல் 7.00 மணி வரையிலான புண்ணிய காலத்தில் பிரபஞ்ச சக்தி அதிகரித்து காணப்படும். சூரியன் உதயமாக கூடிய இந்த அருமையான நேரத்தில் காமாட்சி அம்மனை வழிபடலாம். காமாட்சி அம்மன் படம் பூஜை அறையில் வைத்து, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்ற வேண்டும். காலையில் எழுந்ததுமே குளித்து முடித்து சுத்தபத்தமாக பூஜை அறையை சுத்தம் செய்து, அம்பாளை அலங்கரித்து, வாசனை மிகுந்த மலர்களை சாற்றி வையுங்கள்.

- Advertisement -

பின்னர் வழக்கம் போல நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கை சந்தன, குங்குமம் இட்டு தயார் செய்து வையுங்கள். அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை போடுங்கள். காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியிலும், ஒரு பித்தளை தட்டு வைக்க வேண்டும். அதற்கு சந்தன குங்குமம் வைத்து, அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் அதே போல வையுங்கள்.

இப்பொழுது சுத்தமான பஞ்சு திரியிட்டு அல்லது தாமரை தண்டு திரியிட்டு தீபம் ஏற்றி வைத்து மனதார சீக்கிரமே வீடு கட்ட வேண்டும் என்று காமாட்சி அம்மனை வேண்டி வழிபட்டால், கிரக தோஷங்களை நீக்கி, நவகிரகங்களையும் உங்களுக்கு சாதகமாக வீடு கட்டும் பாக்கியத்தை கொடுக்க செய்வாள் என்பது நம்பிக்கை. காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது, தாமரை மலர் கிடைத்தால், அதை காமாட்சி அம்மன் பாதத்தில் வையுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

- Advertisement -

காமாட்சி அம்மனை வேண்டி வணங்கிய பின்பு சௌந்தர்ய லஹரி அல்லது அபிராமி அந்தாதி பாடலை தமிழில் படியுங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து வர சீக்கிரமே வீடு கட்டும் யோகத்தை பெறுவீர்கள். தினமும் இப்படி காலையில் எழுந்து செய்ய முடியாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இப்படி செய்யலாம். அப்படியும் என்னால் முடியாது காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், மற்றவர்களை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள், வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் இதை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
10-05-2025 சனி மகா பிரதோஷம்

வெள்ளி அன்று மாலையில் 6 முதல் 7 மணி வரையிலான இதே நேரத்தில் காமாட்சி அம்மன் படத்திற்கு முன்பாக காமாட்சி அம்மன் விளக்கில் நாணயத்தை போட்டு ஏற்றி, அபிராமி அந்தாதி பாடல்கள் அல்லது சௌந்தர்யலஹரி ஸ்லோகம் வாசியுங்கள். நூறு பாடல்கள் நிறைந்துள்ள இதனை வாசித்து முடிக்கும் பொழுதே, உங்களுக்குள் ஒரு புது நம்பிக்கை பிறக்கும். உலக உயிர்களுக்கு எல்லாம் தாயாக விளங்கும் காமாட்சி அம்மன் தாயார், உங்களுக்காக நவகிரகங்களையும் பணிய செய்து, சீக்கிரம் சொந்த வீடு கட்டும் பாக்கியத்தையும், நீங்கள் வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவாள்.

சற்று முன்