வீடு மங்களகரமாகவும் சுபிட்சமாகவும் இருக்க வேண்டும் என்றால், வீடு துடைக்கும் போது இதை மட்டும் செய்து விடாதீர்கள். பிறகு தீராத துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

- Advertisement -

ஒரு வீடு என்பதை எப்போதுமே பொருட்களை வைத்து மட்டும் கட்டும் ஒரு இடம் ஆக நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் அது நிச்சயமாக ஒரு நல்ல மனைக்கு அர்த்தம் கிடையாது. வீடு என்பது அனைவரும் ஒன்றாக இருந்து கொண்டு உண்டு உறங்கி தங்கள் வாழ்நாளில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் நல்லபடியாகவும் வாழ நாம் அமைத்துக் கொள்ளும் ஒரு இடமாக அதை கருதினால் மட்டுமே அந்த வீடு என்றைக்குமே வற்றாத செல்வத்துடனும் மகாலட்சுமி கடாசத்துடனும் இருக்கும். இப்படி வீட்டை வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வீடு என்றாலே இதை பெண்கள் தான் செய்ய வேண்டும், இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்த பாகுபாடும் வைக்காமல் இது நம் வீடு இதை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் வாழ்ந்தால் இறைவனின் அனுக்கிரகமும் கிடைத்து, நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடம் ஆக அந்த வீடு மாறும். அப்படிப்பட்ட ஒரு வீட்டில் நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் நம்மை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி விடுகிறது. தெரிந்தே யாரும் எதையும் செய்ய போவதில்லை தான். அப்படி தெரியாமல் நாம் என்ன தவறு செய்வதால் நமக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.

வீடு எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் மட்டுமே மகாலட்சுமி ஆனவள் அங்கு நிரந்தரமாக தங்கி வாசம் செய்வாள் இது எல்லோரும் நன்கு அறிந்த ஒரு விஷயம் தான். அப்படி ஒரு வீடு சுத்தமாக இருக்க நாம் செய்யும் முதல் காரியம் வீட்டை துடைப்பது. வீட்டை துடைக்கும் போது எதையெல்லாம் சேர்த்து துடைக்க வேண்டும் என்பது கூட இப்போது பெருமளவிற்கு அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. உப்பு, மஞ்சள் இது போன்ற பொருட்களை சேர்த்து துடைக்கும் போது கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும் போன்றவை எல்லாம் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் எதை வைத்து துடைக்கவே கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? அது நாம் உடுத்தி பழதாகி போன துணிகளை வைத்து கட்டாயமாக வீட்டை துடைக்கவே கூடாது.

- Advertisement -

ஆமாம் நாம் உடுத்தும் ஆடை பழையது ஆகி விட்டால் பெரும்பாலும் அதை வீடு துடைப்பதற்கும் அடுப்பங்கரையில் கை பிடிக்கும் துணியாகவும், சில வீடுகளில் அதை வைத்து பூஜையறை, சாமி படம் இது போன்று துடைக்கும் வேலைகளுக்கு கூட இந்த துணிகளை பயன்படுத்துகிறார்கள் இது மிகப் பெரிய தவறு. ஏன்னெனில் நாம் உடுத்தும் ஆடையில் நம்முடைய வியர்வை வாசம் அதில் ஒட்டி இருக்கும். அது மட்டும் இன்றி பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களின் மாதவிடாய் நேரங்களில் அதை அணிந்திருப்பார்கள். பொதுவாக நாம் அணிந்த துணியானது நல்ல வஸ்திரம் கிடையாது உடுத்தி பழையது அடைந்து விட்டாலே அந்த வஸ்திரத்தில் தரித்திரம் தங்கி விடும். அதனால் தான் பெரும்பாலும் பூஜை நாட்களை புது துணி உடுத்தும் பழக்கத்தி வைத்து இருக்கிறார்கள். இப்படி தான் நம் முன்னோர்கள் சொல்லியும், வாழ்ந்தும் இருக்கிறார்கள்.

இந்த துணிகளை வைத்து நாம் வீட்டை சுத்தப்படுத்தும் போது அதை நாம் எந்தெந்த நேரங்களில் எல்லாம் அணிந்து இருப்போம் என்று நமக்கே சில நேரங்களில் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு துணியை வைத்து வீட்டை சுத்தப்படுத்தும் போது நிச்சயமாக வீட்டில் நல்ல ஆற்றல்களோ, தெய்வங்களோ தங்காது. அதற்காக நீங்கள் அந்த தண்ணீரில் எதை சேர்த்து இப்படி துடைத்தாலும் கட்டாயமாக நடக்காது. இப்போதெல்லாம் துடைப்பதற்கு துணியை பெரும்பாலும் யாரும் உபயோகிப்பதில்லை துடைக்கிறார்கள். ஆனாலும் இந்த துணிகளை அடுப்பங்கரையில் கைப்பிடி துணியாகவும் மற்ற இடங்களை துடைக்க சின்ன சின்ன துணிகள் ஆகவும் இதை பயன்படுத்துகிறார்கள் அப்படியும் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

அடுப்பங்கரையில் ஏன் இதை பயன்படுத்தக் கூடாது என்றால் நாம் சுவாமிக்கு படைக்க நெய்வேத்தியம் போன்றவை எல்லாம் படைப்போம். பொதுவாகவே தினமும் செய்யும் உணவையே நாம் காகத்திற்கு வைத்து சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்க தான் செய்கிறது. அப்படி செய்யக்கூடிய உணவில் இந்தத் துணியை பயன்படுத்தி எடுத்து வைத்து சமைக்கும் போது அதுவும் நமக்கு சுத்தம் இல்லாமல் போய் விடுகிறது. என்ன இந்த துணிகளால் கூட இப்படி எல்லாம் நடக்குமா என்று சிலர் என்ன தோன்றும் ஆனால் நாம் ஒன்றும் இல்லை சின்ன சாதாரண விஷயம் என்று நினைக்கும் ஒன்றுதான் நமக்கு பெரிய அளவில் துன்பத்தை தரும் என்பதையும் மறந்து விடக்கூடாது. எனவே இந்த ஒரு தவறை இனியும் செய்யாதீர்கள் இதுவரை தெரியாமல் செய்து இருந்தாலும் இனி செய்ய வேண்டாம்.

அப்படியானால் இந்த பழைய துணிகளை என்ன செய்வது என்று கேட்டால் இதை பாத்ரூம் கால் மிதியாகவும் இந்த துணிகளை சேர்த்து வைத்து தலையணை போன்றவைகள் தைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா? தோட்டம் போன்ற இடத்தில் ஒற்றை தீபம் ஏற்றுவது எதனால் தெரியுமா? இத தெரிஞ்சிக்காம விட்டுடாதீங்க!

இது போன்று நாம் அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் கூட நம்முடைய பிரச்சனைகள் தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். இது போல தவறு நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்களால் இனியும் இந்த தவறுகளை செய்யாமல் துன்பம் அற்ற வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -