ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் 24 மணி நேரமும் வீட்டை வாசமாக வைத்துக் கொள்ள இந்த 1 பொருள் இருந்தால் போதுமே. தியான மடத்துக்கு இணையான நிம்மதி வீட்டிலேயே கிடைக்கும்.

smell
- Advertisement -

மனதை அமைதிப்படுத்திக்கொள்ள கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். தியான மடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் கண்களை மூடி அமர்ந்தால் கூட நம்முடைய மனது அமைதிபடும். எந்த சூழ்நிலையில் தெரியுமா? நம்முடைய வீடு நல்ல நறுமணத்தோடு இருக்கும் பட்சத்தில். வீட்டை சுத்தப்படுத்திவிட்டு, 24 மணி நேரமும் நறுமணம் வீசும் படி பார்த்துக் கொண்டாலே போதும். வீட்டில் இருப்பவர்களுக்கு மனது அமைதியாக இருக்கும். சந்தோஷமும் வீட்டில் இருப்பவர்களுக்கு நிறைவாக கிடைக்கும்.

அந்த வகையில் பார்த்தால் வீட்டை வாசனையாக மாற்ற அதிக காசு கொடுத்து ஸ்ப்ரே வாங்கி அடிக்கலாம். ஆனால் அதை எல்லோராலும் எப்போதும் செய்து கொண்டே இருக்க முடியாது. வாசம் நிறைந்த ஊதுவத்தி சாம்பிராணி போடலாம். ஆனால் 24 மணி நேரமும் புகையில் இருக்க முடியாது. நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து வீட்டை 24 மணி நேரமும் நறுமணமாக வைத்துக் கொள்ள இரண்டு பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வீட்டை நறுமணமாக வைத்துக் கொள்ள குறிப்பு 1:
ஒரு வேஸ்டான குப்பையில் தூக்கிப் போடும் இந்த பிளாஸ்டிக் தயிர் டப்பாவை கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆப்ப சோடா 2 ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு வாசனைத் தரும் ஜவ்வாது, அக்தர், கோரோசனை, புனுகு, இதில் எந்த பொருளை வேண்டும் என்றாலும் கலக்கலாம். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து விடாதீர்கள். வாசனை ரொம்ப ரொம்ப அதிகம் வந்துவிடும்.

ஏதாவது ஒரு பொருள் இரண்டு சிட்டிகை கலந்துவிட்டு, இதோடு வெண்ணிலா எசன்ஸ், பைனாப்பிள் எசன்ஸ் அப்படி இல்லை என்றால் ரோஸ் வாட்டர் என்று சொல்லப்படும் பன்னீர் இதில் ஏதாவது ஒன்றை 1 ஸ்பூன் அளவு ஊற்றி நன்றாக கலந்தால் இந்த ஆப்ப சோடாவில் இருந்து ஒரு விதமான நல்ல நறுமணம் 24 மணி நேரமும் வெளிவரும்.

- Advertisement -

தயார் செய்த இந்த டப்பாவுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது மெலிசான காட்டன் துணியை போட்டு, ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விடுங்கள். இதன் மீது சின்ன சின்ன ஓட்டைகளை கத்தியை வைத்து, கத்திரிக்கோலை வைத்து போட்டு விட்டால் போதும். இதிலிருந்து நல்ல நறுமணம் வீட்டில் வீசத் தொடங்கிவிடும். அந்த நறுமணம் நிலையாக வீட்டில் நிலைத்து தங்கும்.

வீட்டை நறுமணமாக வைத்துக் கொள்ள குறிப்பு 2:
இந்த நறுமணம் நிறைந்த பொருட்களை எல்லாம் உங்களால் கடைக்கு சென்று வாங்க முடியாதா. அதை டப்பாவில் ஆப்ப சோடாவை போட்டுக்கோங்க. துணிகள் வாசமாக இருக்க பயன்படுத்தும் கம்ஃபோர்ட் லிக்விட் பெரும்பாலும் நம்முடைய வீட்டில் இருக்கும். அதை அந்த ஆப்ப சோடாவில் ஊற்றி தளதளவென பிசைய வேண்டும். ஒரேடியாக கம்ஃபோட்டை ஊற்றி விட வேண்டாம். சரியான அளவில் ஊற்றை மாவை தளதளவென பிசைந்தால் போதும்.

- Advertisement -

இப்போது நமக்கு தேவையான வாசனை திரவியம் தயார். இதன் மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு, ரப்பர் பேண்ட் போட்டு மேலே ஓட்டை போட்டு விட்டால், கூட இதிலிருந்து நல்ல நறுமணம் வீசும். இப்படி தயார் செய்த டப்பாவை வரவேற்பறையில் வைக்கலாம். குளியல் அறையில் வைக்கலாம். கழிவறையில் வைக்கலாம். சமையல் அறையில் சிங்குக்கு அடியில் கூட வைக்கலாம். சின்ன சின்ன கொசு தொந்தரவு கூட இருக்காது.

இதையும் படிக்கலாமே: வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்துங்க! இனிப்பு பணியாரம் யாருக்கெல்லாம் பிடிக்கும். இந்த ரெசிபி உங்களுக்காக.

குறிப்பாக வீட்டில் அசைவம் செய்து முடித்த பின்பு சிங்கிள் இருந்து வரும் வாடையை தாங்கவே முடியாது. சிங்கிள் எப்போதுமே அசைவம் கழுவிய பிறகோ அல்லது இரவு எல்லா வேலையும் முடித்த பின்பு, ஒரு மூடி அளவு டெட்டால் ஊற்றி சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் அந்த வாசம் சிங்க் ஓட்டையிலிருந்து மீண்டும் மீண்டும் வெளியேறாமல் இருக்கும். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருந்தால் தான் மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -