வீண் பழியிலிருந்து விடுபட, பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

amman5
- Advertisement -

பொதுவாகவே, யாரையும் கை நீட்டி நாம் அவதூறாக பேசக்கூடாது. ஒருவரை பற்றி நன்றாக தெரியாமல் அவர் மீது பழி போடுவது, ஒரு விஷயத்திற்கு கண்ணு காது மூக்கு வைத்து பேசுவது, அல்லது அவர்களை பற்றி தவறாக பேசுவது ரொம்ப ரொம்ப தப்புங்க. அதிலும் ஒரு பெண்ணை பற்றி கை நீட்டி அவதூறாக பேசுவது என்பது ரொம்ப ரொம்ப தவறு. இந்த காலத்தில் பழி சொல்வது என்பது ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமான காரியமாக மாறிவிட்டது.

கைநீட்டி அனாவசியமா ஒருத்தவங்க மேல பழியை தூக்கி போட்டுட்றாங்க. அதுவும் அந்த பழி, ஒரு பெண்ணின் மீது சுமத்தும் போது, அது பெரிய பெரிய பாதிப்புகளை கொடுத்து விடும். இதுபோல சங்கடங்களை தாங்கி நிற்கும் பெண்களாக நீங்கள் இருந்தால், உங்களைப் பற்றி அவதூறான பேச்சுக்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மூலம் பேசப்பட்டால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நல்லவர், உங்களுடைய மனதிற்கு தெரியும்.

- Advertisement -

ஆகவே உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு நீங்க போய்க்கிட்டே இருங்க. இல்லை, எனக்கு என் மீது சுமத்தப்பட்ட பழி விலக வேண்டும் நான் நல்லவள் என்பதை இந்த ஊர் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக இருந்தால், இந்த அம்பாளை போய் வழிபாடு செய்யுங்க. உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். அவதூறாக பேசிய வாய் உங்களை வாழ்த்தி பேசும். வீண் பழிகளை, சுமைகளை தாங்கி நிற்கும் பெண்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த அம்பாள் வழிபாடு.

திரௌபதி அம்மன் வழிபாடு

தர்மராஜா கோவில், திரௌபதி அம்மன் கோவில் என்று உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எந்த கோவில் இருக்கிறது என்பதை தேடி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். தர்மராஜா கோவிலிலும் திரௌபதி அம்பாள் சன்னதி இருக்கும். அந்த திரௌபதி அம்மனுக்கு தொடர்ந்து 21 நாட்கள் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

21 நாட்களும் திரௌபதி அம்மனுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் மனதில் இருக்கும் கஷ்டத்தை அந்த அம்பாளிடம் இறக்கி வையுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதை உங்கள் அம்மாவிடம் சொல்வது போல அல்லது உங்கள் தோழியிடம் சொல்வது போல அந்த அம்பாளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த பிரச்சனையில் இருந்து நான் வெளிவர வேண்டும். என் மனதில் இருக்கும் கஷ்டம் நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனை வையுங்கள். மனமுருகி இந்த வேண்டுதலை வைத்து தொடர்ந்து 21 நாட்கள் இந்த அம்பாளுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்தால் உங்கள் மீது விழுந்த அவதூறான பழி நிச்சயம் விலகும். விளக்கு போட்டு அம்பாளை 21 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

ஒரு பெண்ணுக்கு அவமானம் நேர்ந்தால், ஒரு பெண்ணின் மீது அவதூறாக பழி சுமத்தினால் ஒரு பெண்ணுக்கு மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்பது இந்த திரௌபதி அம்மனுக்கு நன்றாக தெரியும். அதற்கான கதையை மகாபாரதம் நமக்கு சொல்லி இருக்கிறது. இந்த மகாபாரதத்தில் திரௌபதிக்கு எவ்வளவு அவதூறுகள் எவ்வளவோ அவமானங்கள் ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்த அம்பாளுக்கு ஒரு பெண்ணினுடைய கஷ்டம் என்ன என்று தெரியும். எவ்வளவு அவமானங்களை சுமந்து, தான் ஒரு பத்தினி என்பதை நிரூபித்து இன்றளவும் எல்லோருடைய மனதில் இடம் பிடித்திருக்கும் தாய் இந்த திரௌபதி அம்மன். இன்றளவும் நிறைய பேரின் குலதெய்வமாக இந்த திரௌபதி அம்மன் திகழ்கின்றார். கஷ்டப்படும் பெண்கள் திரௌபதி அம்பாளின் பாதங்களை சரணடைந்தால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலுக்கு செவி சாய்பாள் அந்த தேவி.

இதையும் படிக்கலாமே: நகை பணம் சொத்து சேர வாராகி வழிபாடு

உங்களுடைய துன்பங்களை தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவாள். உங்களுக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போது, உங்களைப் பற்றி யாராவது தவறாக பேசி விட்டார்கள், உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இல்லை எனும் சூழ்நிலையில் நீங்கள் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -