இதை எல்லாம் செய்து பாருங்கள், உங்கள் வீட்டு வேலை சுலபமாகும் அதே சமயம் வீடும் அழகாக இருக்கும்.

home tips
- Advertisement -

காலை முதல் மாலை வரை வீட்டில் வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். பெரும்பாலான வேலைகளை மிகவும் அவசரத்தில்தான் செய்து கொண்டிருப்போம். இவ்வாறு வேகமாக செய்யும் சிறிய வேலைகள் கூட சில தருணங்களில் உங்கள் நேரத்தைக் வீணடித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அந்த வேலையும் மிகவும் கடினமாகிவிடும். இவற்றை எளிமையாக சரி செய்யவும், வீட்டின் அழகை எப்பொழுதும் பராமரிக்கவும், தேவையான சில குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

coconut-broken

குறிப்பு 1:
சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காயயை அவசரத்திற்கு உபயோகப்படுத்த வேண்டுமென்றால், முதலில் தேங்காயை உடைத்து, அதனை இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வெளியே எடுக்க வேண்டும். பின்னர் கத்தியை வைத்து அதன் ஓரங்களை நன்றாக கீரி விட்டால் தேங்காய் முழுவதுமாக சிறட்டையிலிருந்து வெளியே வரும். இவ்வாறு வேகவைத்த தேங்காயிலிருந்து தோலினை எளிதாக நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து துருவலாக அரைத்தெடுத்து, அதனை ஒரு டப்பாவிற்கு மாற்றி, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து கொண்டால் ஒரு மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
சநாம் சமையலுக்கு தினம்தோறும் பயன்படுத்தும் கடாயின் அடிப்புறத்தில் எப்போதும் அதிகப்படியான அழுக்கு இருக்கும். அதை நீக்க நாம் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டி இருக்கும். ஆனால் அதை சுலபமாக நீக்க, ஒரு எழுமிச்சை பழத்தை எடுத்து அதை பாதியாக வெட்டி, நாம் சாப்பிட பயன்படுத்து போர்க் அல்லது வேறு ஏதாவது கூர்மையான பொருள் கொண்டு, பாதியாக வெட்டிய எலுமிச்சையின் தோல் புறத்தில் குத்தி அதை ஒரு 10 நொடிகள் தீயில் காட்டிவிட்டு பிறகு கடாயின் அடிப்புறத்தில் உப்பு பரப்பி அதன் மீது எலுமிச்சை பழத்தை தேய்க்க வேண்டும். பிறகு கடாயில் பின் புறத்தில் பேக்கிங் சோடாவை பரப்பிவிட்டு, எலுமிச்சையை வினிகரில் முக்கி அதை கடையின் மீது தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் 2 அல்லது 3 நிமிடங்களில் கடாய் சுத்தமாகிவிடும்.

kadaai

குறிப்பு 3:
இஞ்சி, பூண்டு விழுது தீர்ந்த பின்னர் அதனை ஸ்டோர் செய்து வைக்கும் பாட்டில் அல்லது டப்பாவை என்ன தான் சுத்தமாக துலக்கினாலும், அதிலிருந்து இஞ்சி, பூண்டு விழுதின் மனம் வந்து கொண்டே தான் இருக்கும். இந்த மனம் வராமல் இருக்க ஒரு ஸ்பூன் கடுகினை அந்த பாட்டிலில் சேர்த்து, ஒரு சிறிய துண்டு பழைய காகிதத்தையும் அதனுள் நுழைத்து விட்டு, மூடி போட்டு நன்றாக குலுக்கி விட்டு, அதனை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிடவேண்டும். மறுநாள் மூடியைத் திறக்க அந்த வாசனை முழுவதுமாக மறைந்திருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
உங்கள் வீட்டில் பலவிதமான ஸ்பூன்களை ஒரே கப்பில் வைத்திருந்தால் அவற்றை எடுக்கும்பொழுது ஒன்றுடன் ஒன்று மாட்டிக்கொள்ளும். இல்லாவிடில் எடுக்க நினைத்த பொருள் ஒன்றாக இருக்கும், கையில் வரும் பொருள் ஒன்றாக இருக்கும். இதனை தவிர்க்க முதலில் அந்த கப்பின் மீது இரண்டு ரப்பர் பேண்டுகளை எதிரெதிர் திசைகளில் குறுக்கும், நெடுக்குமாக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த கப் நான்கு பகுதிகளாக பிரிந்து விடும். பிறகு உங்கள் ஸ்பூன்களை அடுக்கி நான்கு பகுதிகளில் பிரித்து வைத்துக் கொள்ளலாம். பார்க்க அழகாகவும் பயன்படுத்த சிரமம் இல்லாமலும் இருக்கும்.

spoon

குறிப்பு 5:
வீட்டில் போடும் காப்பியின் சுவையை விட பெரிய ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்களில் கொடுக்கும் காபியின் சுவை அருமையாக இருக்கும். அவ்வாறான காபியை தயார் செய்ய காபி மெஷின் அல்லது காபி மேக்கர் தேவைப்படும். இவை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாகவும் செய்யலாம் . முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, பின்னர் அதனை ஒரு டம்ளரில் மாற்றி, அதனுடன் பால் சேர்த்தோம் என்றால் கஃபேக்களில் கிடைக்கும் அதே சுவையான காபியை சுவைக்கலாம்.

- Advertisement -