வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தால் உடனே தூக்கிப் போட்டுடுங்க! மஹா தரித்திரத்தை ஏற்படுத்தும் பொருட்களாம் இவை தெரியுமா?

broken-comb-lakshmi
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். இந்த பொருட்கள் தரித்திரத்தையும், எதிர்மறை ஆற்றல்களையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். அப்படியான பொருட்களை எப்பொழுதும் அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் தூக்கி எறிந்து விடுவது நன்மைகளை தரும் என்கிறது ஆன்மீகம்! அப்படியான ஐந்து பொருட்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய முக்கியமான பொருள் தேவையற்ற செருப்புகள் ஆகும். செருப்புகள் நம் பாதங்களை தாங்கி இந்த பூமியில் நம்முடைய பயணத்தை மேற்கொண்டு பல கெட்ட விஷயங்களையும், நல்ல விஷயங்களை மிதித்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த செருப்புகள் தேவையில்லாமல் பயன்படாத நிலையில் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால் உங்களுக்கு பயன்படாத மற்றும் தேவையற்ற செருப்புகளை வீட்டில் அனாவசியமாக வைத்துக் கொள்ளாமல், உடனே தூக்கி எறிந்து விடுங்கள்.

- Advertisement -

இரண்டாவதாக நம் வீட்டில் இருக்கும் உடைந்த சீப்புகள் தரித்திரத்தை ஏற்படுத்தும் பொருளாக இருக்கிறது. தலைமுடியை வாரும் பொழுது பல சாஸ்திரங்கள் கடைபிடிப்பது உண்டு. விளக்கு வைத்த பிறகு தலைவாரக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தலையில் கை வைக்கக்கூடாது, வாரக்கூடாது என்றெல்லாம் கூறுவார்கள். இது தரித்திரத்தை ஏற்படுத்தும் செயல்களாகும். இத்தகைய தலை முடியை வாரும் சீப்பானது, வீட்டில் தரித்தரத்தை ஏற்படுத்தும் என்பதால் உடைந்து போய்விட்டால் அதை உடனே தூக்கி எறிந்து விட வேண்டும். சீப்பில் ஒரு பல் தானே உடைந்து விட்டது என்று வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும் எனவே உடனே தூக்கி எறிந்து விடுங்கள்.

மூன்றாவதாக நம் வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும் பொருளாக இருப்பது தேய்ந்து போன துடைப்பம் ஆகும். துடைப்பத்தை எப்பொழுதும் மகாலட்சுமிக்கு இணையாக கூறப்படுவது வழக்கம். அத்தகைய துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானம் தேயும் என்கிற ஒரு சாஸ்திரமும் உண்டு. வாஸ்து ரீதியாகவும் தேய்ந்த மற்றும் பயன்படாத துடைப்பங்களை வீட்டில் சேர்க்கக்கூடாது. ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு துடைப்பத்தை கொண்டு போக கூடாது என்றெல்லாம் சாஸ்திரங்கள் உண்டு. எனவே இத்தகைய பொருளையும் பயன்படாத நிலையில் நீங்கள் வைத்திருக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்.

- Advertisement -

நான்காவதாக உடைந்த கண்ணாடி துண்டுகள். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது கண்ணாடி பொருளாக இருந்தால் கண்டிப்பாக உடைய கூடாது. அது முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் அல்லாமல், நாம் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி பொருட்களும் அடங்கும். எனவே கண்ணாடி பொருட்கள் உடைந்தால் உடனே அதை அப்புறப்படுத்தி விடுங்கள். வீட்டிற்குள் வைத்துக் கொள்ளவே வேண்டாம். ஐந்தாவதாக நம் வீட்டில் இருக்கவே கூடாத முக்கியமான பொருள் கடிகாரங்கள் ஆகும். காலத்தை நிர்ணயிக்கும் இந்த கடிகாரம், எப்பொழுதும் வீட்டில் ஓடிக்கொண்டே இருந்தால் குடும்பம் சுபீட்சமாக இருக்கும். எனவே கடிகாரம் நின்று விட்டால் அதை உடனுக்குடன் சரி செய்து கொள்ளுங்கள். அப்படி சரி செய்ய முடியாமல் பயன்படாமல் போய்விட்டால் அதை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். வீட்டிற்குள் வைத்துக் கொண்டால் தரித்திரத்தை உண்டாக்கும்.

இப்படியாக நிறைய பொருட்கள் இன்னும் நம் வீட்டில் இருக்கக் கூடாத பொருட்கள் உண்டு. துருப்பிடித்த இரும்பு பொருட்கள், பழைய சுவாமி படங்கள், கேலண்டர்கள், பூஞ்சை பிடித்த பேப்பர்கள், சேதமடைந்த மரக்கலன்கள், உடைந்த சுவாமி சிலைகள், கிழிந்து போன துணிமணிகள், ஓட்டை உடைசல்கள் என்று நமக்கு பயன்படாத எந்த ஒரு பொருளும் தரித்திரத்தை உண்டாக்கும் பொருட்கள் தான் என்பதால் அவற்றை அவ்வப்பொழுது குப்பை போல சேர்த்துக் கொள்ளாமல் தூக்கி எரிந்து வீட்டை மகாலட்சுமி கடாட்சமாக வைத்துக் கொண்டால் கண்டிப்பாக இல்லத்தில் தரித்திரம் நீங்கி செல்வ வளம் கூடும்.

- Advertisement -