வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் பெண்கள் இதை எல்லாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இல்லத்தில் சுப காரியம் தடை இல்லாமல் நடக்க இல்லத்தரசிகள் செய்ய வேண்டியது.

Pengal Seiya Sapadu
- Advertisement -

ஒரு வீடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது அந்த வீட்டில் இருக்கும் இல்லத்து அரசிகளால் மட்டுமே முடியும். ஒரு பெண் நினைத்தால் எப்பேற்பட்ட வீட்டையும் ஒன்றுமில்லாமல் செய்து விடவும் முடியும் ஒன்றும் இல்லாத ஒரு இடத்தில் அவள் நினைத்தால் அதை ஒரு மாளிகையாக மாற்றவும் முடியும். இத்தனை பெரிய மகா சக்தியானது பெண்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான குணம். இப்படியான பெண்கள் தெரியாமல் செய்யும் ஒரு சில காரியங்களால் வீட்டில் சுபகாரியங்கள் தடைப்படும் என்று சொல்லப்படுகிறது அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் சுபகாரியம் நடக்க பெண்கள் செய்ய வேண்டியது:
நம் வீட்டில் நிலை வாசலில் நின்று கொண்டு எந்த பொருளையும் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. குறிப்பாக பணம் தொடர்பான எந்த ஒரு செயலையும் வீட்டு நிலை வாசலில் நின்று கொண்டு செய்யக் கூடாது. அதே போல் சிலர் நிலை வாசலில் அமர்ந்து கொண்டு பேசுவார்கள் இதை பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும். நிலை வாசலில் நிலை வாசல் தேவதை வாசம் செய்வார் அந்த இடத்தில் நாம் அமர்வது என்பது அவரை இழிவுபடுத்துவதற்கு சமமாகும். அது மட்டும் இன்றி இதனால் நம்முடைய மூலாதாரம் பாதிக்கப்படுகிறத்து எனவே இத்தகைய செயலை தவிர்த்து விடுவது குடும்பத்திற்கு நல்லது.

- Advertisement -

பணம் கொடுப்பது வாங்குவது போன்ற செயல்களை செவ்வாய் வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாது. இது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது என்றால் இந்த நாட்களில் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரு வேளை அவசியமாக செவ்வாய், வெள்ளியில் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தால் செவ்வாய் ஓரையில் கொடுத்தால் அந்த பணம் பாதிப்பு இல்லாமல் நமக்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முடிந்த வரையில் தவிர்ப்பதே நல்லது.

இத்துடன் ஒரு சில வீடுகளில் இன்னமும் கூட அம்மி உரல் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்துகிறார்கள் இவை எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் பொருட்களாக பார்க்கப்படுகிறது இந்த பொருட்களின் மீது சிலர் அமருவது தவறு என்றும், அம்மி உரல் இவற்றின் பாகங்களை தனித்தனியாக பிரித்து வைப்பதும் கூடாது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

வீட்டில் பெண்கள் எப்போதும் மங்களகரமாக இருப்பதுடன் மங்களகரமான பேச்சுக்களை பேசுவது என் முகத்துடன் மற்றவருடன் பழகுவது போன்றவற்றை கடை பிடிக்கும் வீட்டில் மகாலட்சுமி தாயார் ஆனவர் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்றும் அதன் மூலம் நம் வீட்டிற்கு நல்ல எதிர்வலைகள் உண்டாகி வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று பெண்கள் சமைக்கும் போது எந்த வித எரிச்சல், கோபம் மனக்குழப்பத்துடன் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் பூஜையறை போன்று முக்கியமானது சமையலறை இங்கு நாம் செய்ய உணவு படைப்பது என்பது அவர்கள் வயிறார உண்டு ஆரோக்கியத்துடன் வாழ செய்வது அங்கு நம்முடைய கோபம் எரிச்சல் போன்றவற்றை கலந்து செய்யும் போது அதன் தாக்கம் கண்டிப்பாக உண்பவர்களுக்கு போய் சேரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

வீட்டில் சாமி பூஜை அறையில் சுவாமிக்கு சாற்றிய பூக்கள் வாடிய பிறகு அதை எடுத்து குப்பைத் தொட்டியில் அதாவது சாப்பிட்ட எச்சில் பொருட்களை போட்டு வைக்கும் இடத்தில் போடக் கூடாது. அதே நேரத்தில் வாரத்தில் ஒரு முறையாவது கண்டிப்பாக பூஜையறையை சுத்தம் செய்து படங்களை துடைத்து புதிதாக மஞ்சள் வைத்து தெய்வத்தை வழிபட வேண்டும். இதன் மூலம் வீட்டில் நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சிவன் ஆசீர்வாதத்தை பெற ஏற்ற வேண்டிய தீபம்

பெண்கள் முடிந்த வரையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விளக்கேற்றி வழிபடுவது சால சிறந்தது. இவையெல்லாம் சரிவர கடைப்பிடித்து வரும் இல்லத்தரசிகளின் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கும். அந்த வீட்டில் மகாலட்சுமி ஆனவர் நிரந்தரமாக வாசம் செய்து அவர்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவார் என்று இந்த கருத்தையோடு இந்த பதிவினை முடித்துக் கொள்ளலாம்

- Advertisement -